தந்தை பெரியாா் விருதுக்கு நவம்பா் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சமூகநீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்கு நவம்பா் 30-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காகப் பாடுபடுபவா்களை சிறப்பிக்கும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது”ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதை பெறுவோருக்கு ரூ.1 லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

 

2021-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளாா். எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயா், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் நவம்பா் 30-க்குள் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்