தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவமழை ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் நெல்லை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுதவிர, வடமாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதஅளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று தென்மாவட்டங்களில் லேசானது முதல் மிதஅளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மறுமொழி இடவும்