தமிழக மீனவர்கள் கைது ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதிகளில் உள்ள 23 மீனவர்கள் கடந்த 11ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதையடுத்து அவர்கள் புதன்கிழமை இரவு இலங்கை பருத்தித்துறைக்கு தென் கிழக்கே நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்த தமிழகத்தை சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்க வேண்டியது. மேலும் இந்திய- இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையை பிரதமர் மோடி தீர்க்க வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள 23 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளுக்கு இந்த பிரச்சினையை எடுத்துச் சென்று வெளியுறவு அமைச்சகத்துக்கு வலியுறுத்த வேண்டும்.

மேலும் இதுபோன்று இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிரதமர் இதற்கான நிரந்திர தீர்வை காணவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.