திமுக வந்தது; மீண்டும் மின்வெட்டு!!

திமுக ஆட்சிக்கு வந்ததும் 10 ஆண்டு காலம் தலை காட்டாத மின்வெட்டு இப்பொ ழுது மாநிலம் முழுவதும் மீண்டும் நிலவுகிறது என்று அதிமுக ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இது தொடர்பாக வியாழக்கிழமை அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

 

திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அந்தக் கட்சியின் இயற்கை குணாதிசயங்கள் தமிழக மக்களை வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டன.

உருட்டல் மிரட்டல்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

 

10 ஆண்டு காலம் தலைகாட்டாத மின்வெட்டு இப்பொழுது மாநிலம் முழுவதும் தலைவிரித்து ஆடுகிறது.

பட்டப் பகலில் சட்டவிரோதச் செயல்களில் எவ்வித கூச்சமோ, அச்சமோ இன்றி திமுகவினர் வெட்ட வெளிகளிலும், வீதிகளிலும் முழு மூச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அலுவலகங்கள் சுதந்திரமா கப் பணிசெய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினரின் தலையீடும்,அடிப்படை அரசியல் கடமையில் ஈடுபட்டிருக்கும் அதிமுகவின் தக வல் தொழில்நுட்பப்பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களை ஏவிவிடுவதில் திமுகவினர் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக உள்ளனர். காவல் துறையினரின் துணைகொண்டு அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல்களையும், பொய்வழக்கு போடும் அடாத செயல்களிலும் திமுகவினர் ஈடுப்டும் நிகழ்வுகள் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது.

 

ஜனநாயகத்தின் ஆணிவேராக விளங்கக்கூடிய கருத்து சுதந்திரத்தை நசுக்குவதில் திமுகவினர் தங்களது முழு வரம்பு மீறலையும் மாநிலமெங்கும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

ஆளும் கட்சியினரின் தவறு களையும், தலையீடுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் அதிமுக புதுவெள்ளத்தில் மிதந்துவரும் நுரை பூ அல்ல, ஊதி விளையாட தொண்டர்களின் வீரத்திலும், தியாகத்திலும் விளைந்திட்ட நெருப்பில் பூத்த மலர். எந்த அச்சுறுத்தலும் எங்கள் இயக்கத்தை நெருங்க முடியாது. கட்சியினரை அச்சுறுத்துவதால் அதிமுக அடங்கிப் போகும் என்று தப்புக் கணக்குப் போடா மல், வாக்களித்த மக்களுக்குச் செய்ய வேண்டிய அடிப்படைக்கடமை இருப்பதை திமுக நினைவில்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன