திருநீர்மலையில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு!!- ரோப் கார் வசதி!!

பல்லாவரத்தை அடுத்த திருநீர்மலையில் உள்ள ஸ்ரீநீர்வண்ண பெருமாள் ஆலயத்தில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வு நடவடிக்கைகளை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வியாழக்கிழமை மேற்கொண்டார்.

 

108 திவ்யதேசங்களில் ஒன்றான திருநீர்மலை ஸ்ரீநீர்வண்ண பெருமாள் ஆலயத்தில் 270 படிக்கட்டுகள் ஏறிச்சென்று தரிசிக்க சிரமப்படும் முதியோர்களுக்கு உதவும் வகையில் ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை ஸ்ரீநீர்வண்ணபெருமாள் கோயிலில் பணியாற்றும் பட்டாச்சாரியார்களுக்கான குடியிருப்புகளை புனரமைத்தல் தொடர்பாக வியாழக்கிழமை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. உடன் பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகமெங்கும் படிக்கட்டுகளில் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய சிரமப்படும் முதியோர்களுக்கு உதவும் வகையில் அனைத்து ஆலயங்களிலும் ரோப்கார் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் ஆய்வு நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருநீர்மலை ஆலயத்தில் கலந்தாய்வு மேற்கொண்டு ரோப் கார் திட்டம் செயல்படுத்த உரிய நடவெடிக்கை எடுக்கபட உள்ளது.

 

இங்கு பணிபுரிந்து வரும் பத்துக் கும் மேற்பட்ட கோயில் பணியாளர் கள் 5 ஆண்டுகளைக் கடந்தும் இன் னும் பணி நியமனம் செய்யப்படா னும் பணி நியமனம் செய்யப்படா மல் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களது கோரிக்கையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும். ஆலய பட்டாச்சா ரியார்கள் தங்கி இருக்கும் 13 குடியி ருப்புகளும் மிகவும் சிதிலமடைந்த நிலையில் நிலையில் உள்ளதால் புதிதாக கட்டித் தர உரிய நடவடிக்கை மேற்கட்டித்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

வெயில் காலங்களில் மலையில் 270 படிகள் ஏறி வரும் பக்தர்கள் சிர மத்தைக் கருத்தில் கொண்டு ஆங் காங்கே உடனடியாக நிழல் மேற்கூரைகள் அமைக்கப்படும். அறநிலையத்துறையை பொருத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி திருக்கோயிலுக்கு சொந்தமானநிலம் அனைத்தையும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு அறநிலையத்து றைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள் வோம் என்றார். பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி உடன் இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன