தீராத மலச்சிக்கலையும் தீர்க்கும் அருமருந்துகள்.

 

நம் உடலை நாம் தான் பேணிக்காக்க வேண்டும்.

சப்ஜெக்ட் சுளிக்க வைத்தாலும் உடலில் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் அடிப்படை மலச்சிக்கல் தான்.

ஆரோக்கியமாக உள்ள ஒருவர் சரியான உணவு முறையைப் பின்பற்றி, தேவையான அளவுக்குத் தண்ணீர் குடித்து, தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

மட்டுமல்லாது மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததுமே மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும்; தினமும் குறிப்பிட்ட நேரத்தில் மலம் கழிப்பது வழக்கமாகிவிடும்.
நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த பழுப்பு அல்லது சிவப்பு அரிசி, கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழு மற்றும் சிறுதானியங்கள் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.
பச்சை நிற காய்கறிகள், வாழைத்தண்டு, பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்புகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம். இவற்றை தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினமும் தன் தேவைக்கேற்ப இரண்டரை முதல் மூன்று லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீர் அருந்தலாம்.

*தீராத மலச்சிக்கலையும் தீர்த்துவைக்கும் அருமருந்து!*

மலச்சிக்கலே நோய் வருவதற்கான அறிகுறியாகும்.

மலச்சிக்கலின்றி வாழ்ந்தால் நூறாண்டு நோயின்றி வாழலாம்.

வயது முதிர்ந்தவர்களுக்கு மலச்சிக்கல் வருவது இயற்கையே.

ஆனால் சரியான உணவுப் பழக்கம் இல்லாமை – டென்சன் – பரபரப்பு – அலட்சியம் – பிஸி – கோபம் _ சரியான உடற்பயிற்சியின்மை காரணமாகவும் இது ஏற்பட்டு பற்பல நோய்களை நமக்கு “கிரீன் சிக்னல்” காட்டி வர வைக்கிறது.

இவர்களின் உட லில் சீரண உறுப்புகள் வலுவிழந்து இருப்பதால் உணவுகள் எளிதில் சீரணம்  ஆகாது.

இவர்கள் மலமிளக்கி மருந்து களைச் சாப்பிட்டாலும் இந்தப் பிரச்சனை தீராது. இதனால் மூட்டுவலி, இடுப்புவலி, தலை வலி என பல உபாதைகள் உருவாகும்.

இப்பிரச்சனைக்கெல்லாம் அருமருந்தாக இருப்பது உலர்ந்த திராட்சைகளே. வெள்ளை மற்றும் கருப்பு திராட்சைகள்

கருப்பு திராட்சைகளுக்கு மேலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.

 

தினமும் படுக்கைக்குச் செல்லும்முன் பாலில் இந்தப் உலர் பழங்களைச் சேர்த்து காய்ச்சி அருந்தி வந்தால் மலச் சிக்கல் தீரும்.

கருப்பு திராட்சைகளை சுத்தமான தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் போது குறிப்பாக பெண்கள் உடல் உபாதைகள் நீங்கி உடல் பொலிவை பெறுகிறார்கள்

மேலும் கருவேப்பிலையைப் பொடி செய்து மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சமஅளவில் எடுத்து சாப்பிடுவதால் வெயில் காலத்தில் உண்டாகும் மலச்சிக்கல் சரியாகும்.

மேலும் ஒரு மருந்து மலச்சிக்கலுக்கு..

பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

கடுக்காயை கொட்டையை நீக்கி விட்டு பொடி செய்து தினமும் படுப்பதற்கு முன் சாப்பிட்டால் நல்ல தீர்வு சிடைக்கும்.

பப்பாளிப் பழத்தை தினமும் சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்..

அகத்திக் கீரையை வாரம் 1 நாள் சமைத்து உன்ன மலச்சிக்கல் தீரும்…

காலை எழுந்தவுடன் 1.260 மி சுத்தமான குடிநீர் அருந்தி வர மலச்சிக்கல், வயிட்ற்று உபாதைகள், தலைவலி, சிறுநீரக கோளாறுகள் நீங்கும்…

எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியில் சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின் மேல் தூவி சிறிது நேரம் வைத்திருந்து பின்பு பிழிந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்.

வல்லாரையை பொடி செய்து அரை ஸ்பூன் அளவு எடுத்து இரவில் சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

இளநீரில் சிறிது தேன் கலந்து காலையில் குடித்து வந்தால் மலத்துடன் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறி மலச்சிக்கல் குறையும்.

துளசி, துத்தி, வல்லாரை, வில்வம், நாயுருவி, எலுமிச்சை, முள் முருங்கை, அம்மான் பச்சரிசி, அரச இலை, ஓரிதழ் தாமரை, தூதுவளை, கண்டங்கத்தரி, அகத்திக் கீரை ஆகியவைகளின் இலைகளை பறித்து நிழலில் காயவைத்து பொடி செய்து தினமும் இரு வேளை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறையும்…

*ஆரோக்கிய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்…..!*

நன்றி.

நட்புடன்

ராஜ கர்ஜனை ( ஆரோக்கியம் மற்றும் சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன