தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே கலப்பட டீசல் விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்

காங்கேயத்தில் இருந்து வந்த டேங்கர் லாரியை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த திட்டமிட்டனர். அதன்படி டேங்கர் லாரியில் இருந்து டீசலை பேரல்களில் நிரப்பி மற்றொரு வாகனத்தில் ஏற்றியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு நேரில் ஆய்வு செய்து கலப்பட டீசல் என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள் இது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

மீன்பிடி படகுகள் மற்றும் லாரிகளில் பயன்படுத்துவதற்காக கலப்பட டீசல் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட தெரியவந்தது. மேலும் 30 ஆயிரம் கலப்பட டீசலை பறிமுதல் செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்