நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்

வரும் 13-ஆம் தேதியன்று நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையான வலியுறுத்தல் அளித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வு ரத்து குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் கூட குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நாளை இளங்கலை நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.