நெஞ்சார்ந்த நன்றி – உவகையுடன் மு.க.ஸ்டாலின்

சென்னை: கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குபதிவின் போது தமிழகத்தில் உள்ள 38 தொகுதி உட்பட மொத்தம் 96 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

நேற்று மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று இன்று வரை நீடித்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி என தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டும் அதிமுக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வரை வெளியாகியுள்ள முடிவுகளின் அடிப்படையில் இந்தியா அளவில் பாஜக அருதி பெரும்பான்மை  பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் திமுக பெரும்பான்மையான இடங்களை பெற்று (கடந்த தேர்தலில் ஜெயலலிதா பெற்ற அதே வெற்றி) களிப்புடன் உலா வருகிறது.

இதன்மூலம் 2019 நாடாளுமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான வெற்றியை மக்கள் அளித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தி.மு.க. உருவெடுத்துள்ளது..

தமிழக சட்டசபையில்  திரு.மு.க .ஸ்டாலின் சொல்லியபடி 20 தொகுதிகளை பெற முடியாவிட்டாலும் கூட அதிமுக விடம் இருந்து 12 தொகுதிகளை மீட்டு எடுத்து திருவாரூரையும் சேர்த்து 13 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை மக்கள் மூலமாக பெற்றிருக்கிறது தி.மு.க கூட்டணி.

திரு மு.க ஸ்டாலின் அவர்களின் டிவீட் _ கீழே

Mr.Stalin’s Tweet

 

தலை வணக்கம் தமிழகமே!நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!

— M.K.Stalin (@mkstalin) May 23, 2019

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது,

“நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!” எனக் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன