நெற்றியில் பொட்டு வைப்பதேன். ஆழந்த அறிவியல் விளக்கம்..

நம்முடைய முன்னோர்கள் அன்றாட வழக்கங்கள் என்னும் பெயரில் பல அறிவியில் பூர்வமான முறைகளை நமக்கு வகுத்து கொடுத்துள்ளனர்.பல சடங்கு முறைகளை ஏன் செய்கிறோம்? என்று கூட தெரியாமல் நாம் செய்து வருகிறோம்.

ஆண் பெண் எல்லோரும் நெற்றியில் பொட்டு வைப்போம். அதற்கான காரணம் என்ன தெரியுமா?

 

இரண்டு புருவங்களுக்கு மத்தியல் நமது உயிர் ஓட்டத்தை தூண்டும் ஆக்கினை என்னும் மையம் (சக்கரம்) உள்ளது. அதற்கும் மூலாதாரத்திற்கும் (குண்டலனி) சம்மந்தம் உள்ளது.

அதை அடிக்கடி தொட்டு தூண்டும் பொருட்டும், அங்கே ( சக்கரத்தில்) உருவாகும் வெப்பதை கட்டுபடுத்தும் பொருட்டும், ஆண் பெண் அனைவரும் நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அங்கு இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய ‘பிட்யூட்டரி சுரப்பி’ குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமாக இயங்கும் மூளையின் பின்பகுதியில் ஞாபகங்களின் பதிவாக இருக்கும் ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை சிறப்பாக அனுப்ப உதவுகிறது.

நெற்றியிலுள்ள இரு புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக இருப்பதால் அங்கு, மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். தியான நிலைக்கு அந்த உணர்வு அடிப்படையாக உள்ளது. மேலும் மன ஒருமை மற்றும் சிந்தனை தெளிவு ஆகியவற்றிற்கு அந்த நிலை ஏதுவாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. சந்தனம் இடுவதால் நெற்றிப் பொட்டு குளிர்ச்சியாக மாறுவதன் மூலம், குறிப்பிட்ட கால அளவு வரையிலும் மன ஒருமைக்கு உதவி புரிவதாக அறியப்பட்டுள்ளது.

மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த பகுதி நெற்றிக்கண் அதாவது, புருவத்தின் மத்திய பகுதி ஆகும். மற்றவர்களுடைய தீய எண்ணங்கள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அனைத்து விதமான பாதிப்புகளும் அங்கு வைக்கப்படும் குங்குமத்தின் மூலம் விரட்டியடிக்கப்படும் என்று ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதி மகாலட்சுமியின் உறைவிடம் என்பது ஐதீகம். அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெற்றி வகுடு பகுதியில் பெண்கள் தொட்டு, பொட்டு வைப்பதால், அவர்களின் உடலில் அவர்களுக்கே தெரியாமல் சில மாறுதல்கள் ஏற்படுகிறது. அவர்களின் உடலில் சில சுரப்பிகள் தூண்டப்படுகிறது. மேலும் குண்டலனி சக்தி மேலே எழுந்து அவர்களை முழுமையடையச் செய்யும்
அதில் தாய்மை முக்கியமானது

ஆகவே  பெண்கள் நெற்றி வகிட்டில் தினமும் பொட்டு வைப்பதால், அவர்களுக்கு பாலியல் சுரப்பி நன்கு தூண்டப்படுகிறது. அதே போன்று, கர்ப்பபையும் நன்றாக வலுப் பெறுகிறது.

திருமணத்திற்கு பிறகு, பெண்களுக்கு இல்லற உறவில் நல்ல ஆர்வமும், கர்ப்பபை வலுவும் பெறவேண்டும் என்பதற்காக தான், நெற்றி வகிட்டில் பொட்டு வைக்கும் முறையை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

அதன் காரணமாகவே, வளைகாப்பு செய்யும் போது, அனைவரையும் கூப்பிட்டு நெற்றி வகுடுவில் பொட்டு வைத்து தொட்டு ஆசிர்வாதம் செய்ய சொல்கிறார்கள். இதனால் கர்ப்பப்பை வலுப்பெறுகிறது.

கர்ப்பப்பை வலுப் பெற்றால், குறை பிரசவம் உண்டாகாது. நிறை மாதமாக இருக்கும் போது சுகப்பிரசவம் ஏற்படும்.

துரதிஷ்டவசமாக கணவரை இழந்து விட்ட பெண்ணிற்கு பாலியல் சுரப்பி தூண்டபடாமல் இருப்பதற்காகத்தான் அவர்களின் நெற்றி வகிட்டில் பொட்டு வைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், பின்னால் வந்தவர்கள் அந்த விஷயம் தெரியாமல், “கணவனை இழந்த பெண்கள் பொட்டே வைக்க கூடாது” என்று மாற்றி விட்டனர்.

இரு புருவ மத்தியில், ஆண் பெண் அனைவரும், எல்லா நாளிலும் போட்டு வைக்கலாம். அப்படி வைப்பதால் அடுத்தவர்களுடைய வெப்பப் பார்வை நம்மை நேரிடையாக தாக்காது.மேலும் பெண்மணிகளை எவ்விதமான சலனத்திற்கும் உண்டு பண்ணாது.

இந்து பெண் கடவுள்கள் நெற்றி நிறைய குங்குமம் வைத்து காட்சி கொடுப்பது இதை உணர்த்துவதற்காகத்தான்

..

 

நன்றி..

 

ராஜ கர்ஜனை (சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன