பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்

ஒரு ஆற்றங்கறையில் இரண்டு பெரிய மரங்கள் இருந்தன.

அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி முதல் மரத்திடம் மழை காலம் தொடங்க இருப்பதால் நானும் என் குஞ்சுகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா என்றது.

முதலில் இருந்த மரம்

முடியாது என்றது.

அடுத்த மரத்திடம் சென்று கேட்டபோது அது அனுமதித்தது.

குருவி அந்த இரண்டாவது மரத்தில் கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்த நேரம்,

அன்று பலத்த மழை, ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்துச் சென்றது .

தண்ணீரில் இழுத்து செல்லும் மரத்தைப்பார்த்து குருவி சிரித்து கொண்டே சென்னது,

எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லபடுகிறாய் என்று.

அதற்கு அந்த மரம் கூறிய பதில்,

எனக்குத் தெரியும்,

நான் வலு இழந்து விட்டேன், எப்படியும் இந்த மழைக்குத் தாங்க மாட்டேன், தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவேன் என்று.

நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான்

உனக்கு இடம் இல்லை என்றேன்.

என்னை மன்னித்து விடு என்றது.

கருத்து :–  

உங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை என்றால் தவறாக நினைக்காதீர்கள். 

அவரவர் சூழ்நிலை அவரவருக்கு மட்டும் தான் தெரியும்.

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம்..

 

மறுமொழி இடவும்