போலீசாரை வெட்டிய இளம் ரவுடி என்கெளண்டரில் சுட்டுக்கொலை .

சென்னையில் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி வல்லரசு என்பவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.*

ஆனால் இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று வல்லரசுவின் தந்தை சாமிக்கண்ணு பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வல்லரசு என்கவுன்டர் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என்று கூறிய அவர், வல்லரசு, கடந்த 2 ஆண்டுகளாக எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடாமல் திருந்தி வாழ்ந்து வந்தார் என்றும் அவர் கூறினார்.

யார் இந்த வல்லரசு .?

 சென்னை வியாசர்பாடியில் பல கொலை வழக்கில் தொடர்புடைய இவர் இளம் வயதிலேயே (அதாவது சுமார் 20 வயது . ) மிகப்பெரிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் , பின்னணியாக பல குற்றங்களில் ஈடுபட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது..

பெரியஅளவில் வழக்குகள் இல்லை என்றாலும் குற்றங்கள் எண்ணிக்கை அதிகம் என்கிறார்கள்.

முன்னதாக நடைபெற்ற ஒரு குற்றத்திற்காக ரவுடி வல்லரசுவை கைது செய்ய முயன்ற உதவி ஆய்வாளர்களை, வல்லரசு கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

ஆகவே போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி வல்லரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது.

அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டது

மேலும் காயமடைந்த 2 உதவி ஆய்வாளர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். *

Tail பீஸ் :

உதிரி வேர்களை அழிப்பதுடன் நிற்காமல் ஆணிவேரை தேடி கண்டுபிடித்து அழிப்பது தான் பாதுகாப்பின் உச்சம்.. _ புரிந்து கொள்வார்களா?

Karjanayin NEWS

ராஜ கர்ஜனை ( சமூகம் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன