Warning: Creating default object from empty value in /home/chennaiw/public_html/rajakarjanai.com/wp-content/plugins/slick-popup/libs/admin/redux-framework/inc/class.redux_filesystem.php on line 29
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் – rajakarjanai

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

புனே:

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நியாயமான விலையிலும் சரியான நேரத்திலும் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய் மீதான வரி நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைப் பொறுத்த வரையில், பாராளுமன்றத்தில் ஒவ்வொரு முறையும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறேன்.

பணவீக்கத்தை 4 சதவீதத்துக்கு கீழ் வைத்திருக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பணவீக்க பிரச்சினையில் உலக சூழல் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை அமெரிக்கா அனுபவித்து வருகிறது. ஜெர்மனி கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத உயர் பணவீக்கத்தை எதிர் கொள்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம் உள்பட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் மத்திய அரசு கவனித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.