மக்களே உஷார்!!! எங்கும் போலி எதிலும் போலி… இப்போது அதிரடியாக வரும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்ற மருந்துகள்

டெல்லி

இந்திய அளவில் 1280 மருந்துகளின் தரத்தை ஒன்றிய அரசு ஆய்வு செய்தது. அதில் 50 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் கொல்கத்தா மற்றும் சண்டிகர் நகரங்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சளி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகள் தரமற்ற மருந்துகளுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பான முழு பட்டியலையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

காய்ச்சல், சளி, ஜீரண மண்டல பாதிப்புக்கு பயன்படுத்தப்படும், 50 மருந்துகள் தரமற்றவையாக இருந்தன.

இதையடுத்து, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம், cdsco.gov.in என்ற இணையதளத்தில், அந்த போலி மருந்துகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

போலி மற்றும் தரமற்ற மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களின் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், வாரியங்கள் திட்டமிட்டு உள்ளன.

=============

டெயில் பீஸ்

=============

எல்லாவற்றிலும் போலி, அந்த போலிகளை நாம் தரமானதாக நினைத்து, இத்துணை நாள் அருந்தி விட்டோம், இதை அறியாதவர்கள் மேலும் மேலும் அறுந்திக்கொண்டு வருவர்களே!!! எவ்வாறு நாம் இந்த போலி மருந்துகளை பயன்பாட்டில் இருந்து முழுமையாக களைய போகிறோம்!!!

===============