மனிதன். மனிதம்…. மனிதனாக வாழ்வது எப்படி ?

 

* நாம் செய்த கர்ம வினைகளின் படி இந்த பூலோகத்தில்  மனிதப்பிறவி எடுத்துள்ளோம் அப்படி பிறப்பெடுத்த நாம் அதாவது மனிதனாக பிறந்த நாம் ,மனிதனாக வாழ வேண்டும்.*

*சரி..மனிதனாக வாழ்வது எப்படி ?*

*எல்லா உயிர் இனங்களை காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.*

*இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப்பட்டு உள்ளது.*

*மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.*

*அடுத்து சாதி,சமய ,மதக் கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும்.. அதைப் பிடித்துக்கொண்டு மனிதன் தற்போது அழிந்து கொண்டு இருக்கிறான்….*

*உலகில் உண்டாகும் அனைத்து போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணம் சமய, மத ,சாதி, வேற்றுமை களால்தான்.. இதை உண்டாக்கியவர்கள் ஆதிக்க எண்ணம் படைத்தவர்கள். இந்த பொய்யான மதங்களை உண்மை என்று எண்ணி அவர்கள் காட்டிய கொள்கையில் வாழ்வதால், மனித நேயம் இல்லாமல் ஒற்றுமை இல்லாமல் வேறுபட்டு வாழ்ந்து வருகிறான்.*

*அவற்றை முழுவதும் விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான்.*

*அடுத்து பொருள்.. அனைருக்கும் பொதுவானது. அதை அனைவருக்கும் பொதுவாக, சமமாக பகிர்ந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும்,அதுவே மனித பண்பாகும்.*

*உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும்.*

*எவ்வளவுதான் பணம்,பட்டம், பதவி,படிப்பு இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம் ,*

*அந்த பணமோ, பதவியோ, மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை .*

*;மரணத்தைக் காப்பாற்றாத, பணம்,பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும். இவையே மனித பண்பாகும் ,*

*மனிதன் பிறக்கிறான்; பணத்தை தேடி அலைகிறான்; பெண்ணாசை, மண்ணாசை அவனை வாட்டி வதைக்கிறது.*

*இதற்கெல்லாம் அடிமையாகி, இந்த உலக வாழ்வே நிரந்தரம் எனக் கருதி இங்கேயே தங்கி விட நினைக்கிறான்.*

*தன் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, பல தவறுகளை செய்கிறான்.*

*தான் வாழ வந்த இந்த உலகம், ஒரு வாடகை வீடு என்பதை அவன் உணர்வதில்லை.*

*மனிதன் காலப் போக்கில் மனித நேயம் மறந்து, பொருட்களின் மீது நாட்டம் கொண்டு மனிதன் மனிதனாக வாழ மறந்துவருகிறான்.*

*பொருட்கள் நிரந்தரம் அல்ல, மனித வாழ்வும் நிரந்தரம் அல்ல என்பதை உணர வேண்டும்.*

*மனிதனாக பிறந்த நாம் அனைவரும் இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் நல்லது செய்தல் வேண்டும்..*

*அப்படி செய்வதால் நமக்கும் மன நிறைவு கிடைக்கும்.*

*வந்தோம் , பிறந்தோம் ,வாழ்ந்தோம், சென்றோம் என்று இல்லாமல், அடுத்த வரும் நம் தலைமுறை நன்கு வாழ்ந்திட அவர்களுக்கு நல்ல வழி வகைகள் செய்வோம்….*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் தினமும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*

*#வாழ்க_வளமுடன்.*

ராஜகர்ஜனை (சமூகம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன