மனு தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் விஜயதசமி அன்று ஆலயம் திறக்க கோரிக்கை

விஜயதசமி வருகின்ற வெள்ளிக்கிழமை வருவதால் அன்று தமிழகத்தில் உள்ள கோயில்களை திறக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜயதசமி மற்றும் நவராத்திரி நிறைவு நாள் பண்டிகை வரவுள்ளதால் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை(அக்.12) விசாரணைக்கு வரவுள்ளது.

மறுமொழி இடவும்