மன்மோகன் சிங் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 88 நேற்று டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மன்மோகன்சிங் கடந்த 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

திடீரென உடல் சோர்வு அடைந்ததையடுத்து டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.