மீண்டும் பயங்கரம். 3 வயது சிறுமி – வண்புணர்வு – கொலை

ஜார்கண்ட் மாநிலம்,

ஜம்ஷத்பூர் ரயில் நிலையம்.

மாயமான 3 வயது பெண் குழந்தை

ஜம்ஷத்பூரில் இருக்கும் டாடாநகர் ரயில்வே நிலையத்தில் ஒரு ஒரமாக தனது 3 வயது குழந்தையுடன் ஒரு பெண் உறங்கி உள்ளார்.
அயர்ந்து தூங்கிய அந்தப் பெண்மணி அடுத்த நாள் காலையில் தன் அரவணைப்பில் உறங்கிய மூன்று வயது பெண் குழந்தை மாயமான நிலையில், செய்வதறியாது அங்கும் இங்கும் தேடுகிறார்.

பலன் ஏதுமின்றி கதறிக் கொண்டு அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்._

அதன்படி போலீசார் ரயில்நிலையத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, ஒரு நபர் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை தூக்கி செல்வது தெரிந்தது.

பின்னர் புலனாய்வு செய்யும்போது குழந்தையை ஒருவன் தூக்கிக் செய்வது CCTV -யில் தெளிவாகியது.

அவன் குழந்தை கடத்தல் உட்பட பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரிங்கு சாஹு என்பது தெரிய வந்து, உடனே அவனை கிடுக்கிப்பிடி போட்டு போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர்._

அதில் ரிங்கு தனது நண்பரான கைலாஷ் உடன் சேர்ந்து குழந்தைகயை கடத்தி ஒருநாள் முழுக்க பாலியல் வன்கொடுமை செய்ததையும், பின்னர் குழந்தை தொடர்ந்து அழுததால் அதனை கொலை செய்ததையம் இரக்கமின்றி அந்த மனித மிருகம் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களை கைது செய்த போலீசார், அந்த ரயில்நிலையத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் குப்பைகளுக்கு இடையே பிளாஸ்டிக் கவரில் தலையின்றி குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்._

அந்த மிருகங்கள் ஈவு இரக்கமின்றி காம வெறியில் வன்புணர்வு செய்து பச்சிளம் பாலகியை கொலை செய்திருப்பது மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது..

மிகவும் ஜாக்கிரதையும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய தருணம் இது.

அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தி இது போன்ற கொடிய ஒநாய்களை ஒடுக்க வேண்டும்

.
ராஜ கர்ஜனை ( குழந்தை மற்றும் சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன