மீண்டும் பாலியல் வன்கொடுமை – கொலையாளிக்கு தூக்கு

ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை*

கொலையாளிக்கு தூக்கு. மற்றொரு குற்றவாளிக்கும் குறி.

கோவை பன்னிமடை அருகே உள்ள திப்பனூர் .
அந்தப்பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் 25ம் தேதி மாயமானர்.

தேடப்பட்ட அந்த சிறுமி அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் இருந்து துணியால் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமி கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
மறுபடியும் மறுபடியும் இதே போல் குற்றங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது .இது மிகக் கவலையையும், பயத்தையும் அளிக்கிறது.

செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்ப்ட குற்றவாளி பல வழிகளில் தப்பிக்க முயன்றாலும் பல அமைப்புகளின் போராட்டத்தினால்

கொடூரக்கொலையாளி சந்தோஷ் குமாருக்கு இறுதியில் தூக்கு தண்டனை வழக்கப்பட்டுள்ளது.

இந்த தூக்கு தண்டனை விதித்து கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.*

இவ்வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட சந்தோஷ்குமாருடன் மற்றொருவருக்கும் தொடர்பிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், அவரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக அனைத்து செயல்பாடுகளையும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரத்தினம் ஏற்று நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமி பாலியல் வன்கொடுமை மரபணு பரிசோதனையில் மற்றொரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாக, தொடர்ந்து வழக்கை விசாரிக்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு.*

சிறுமியின் குடும்பத்திற்க்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அந்த மற்றொரு குற்றவாளியையும் கண்டுபிடித்து தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்.*

குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது மகிழ்ச்சி; தூக்குத் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி தவறை உணர வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர்..

டெய்ல்..

இது போன்ற தீர்ப்புகள் குற்றவாளிகளை திருத்தினால் நல்லது. – ராஜகர்ஜனை ( சமூக நலம்)

One thought on “மீண்டும் பாலியல் வன்கொடுமை – கொலையாளிக்கு தூக்கு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன