மும்பை பங்குச் சந்தை 491 புள்ளிகள் உயர்ந்தது

மும்பை: இந்திய சந்தைகளில் குறியீட்டு முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் பங்குகள் காரணமாக திங்கள்கிழமையன்று மும்பை பங்குச் சந்தை 491 புள்ளிகள் உயர்ந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தை 17,300 நிலைக்கு மேல் நிலைத்தது வர்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தை 491.01 புள்ளிகள் உயர்ந்து 58,410.98இல் வர்த்தகமானது. தொடக்கத்தில் சென்செக்ஸ் 57,639.80 ஆக குறைந்தது வர்த்தகமானாலும், சிறிது நேரத்தில் மீண்டும் எழுச்சி பெற்று 529.03 புள்ளிகள் உயர்ந்து 58,449 என்ற உச்சத்தைத் தொட்டது.

பாரத ஸ்டேட் வங்கி, என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இந்தஸ் இந்த் வங்கி ஆகியவை அதிக அளவில் வர்த்தகமானது. மறுபுறம், எல்&டி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், விப்ரோ, டாடா ஸ்டீல், நெஸ்ட்லே, பவர் கிரிட் மற்றும் பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பின்தங்கின.

சர்வதேச ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 0.07 சதவீதம் குறைந்து 91.57 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.