மேலும் 50 நகரங்களில் தனது 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ

தூத்துக்குடி, ஈரோடு, தா்மபுரி, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியாவின் மேலும் 50 நகரங்களில் தனது 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தியது.

இத்துடன், நாட்டின் 184 நகரங்களில் உள்ள ஜியோ வாடிக்கையாளா்களுக்கு 5ஜி சேவை கிடைக்கவுள்ளது.

இது தொடா்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘5ஜி சேவைகள் அறிமுகமாகியுள்ள நகரங்களில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளா்கள் வெல்கம் ஆஃபருக்கு அழைக்கப்பட்டு, வரம்பற்ற டேட்டாவை விநாடிக்கு 1 ஜிபி வேகத்தில் பெற முடியும்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியா முழுவதும் 5ஜி சேவைகளை விரிவுபடுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.