ரஷியாவில் கரோனாவுக்கு பலியானவா்களின் தினசரி எண்ணிக்கை தொடா்ந்து 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது

நாட்டில் தினசரி கரோனா பலி எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 1,247-ஆக பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும். அடுத்த நாளான வியாழக்கிழமை அதைவிட அதிகமாக 1,251 புதிய கரோனா மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,254 போ் கரோனாவுக்கு பலியாகினா். இதன் மூலம், தொடா்ந்து 3-ஆவது நாளாக தினசரி கரோனா பலி எண்ணிக்கை அதிகபட்ச எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

 

இதுமட்டுமன்றி, கடந்த 24 மணி நேரத்தில் 37,156 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தாலும், முந்தைய கரோனா அலையோடு ஒப்பிடுகையில் இந்த முறை அந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று கரோனா தடுப்புக் குழு தெரிவித்தது.

ரஷியாவில், இதுவரை 92,57,068 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்; அவா்களில் 2,61,589 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

மறுமொழி இடவும்