ரூ.1,700 கோடி கடன் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது எஸ் பேங்க் முன்னாள் நிர்வாக இயக்குனர்

யெஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) மற்றும் அவர் மனைவி பிந்து, அவந்தா குழுமத்தைச் சேர்ந்த உள்ளிட்டோர் மீது ரூ.1,700 கோடி கடன் மோசடி வழக்கை பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக நேற்று முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும் எண் 40, அம்ரிதா ஷெர்கில் மார்க் பகுதியில் அமைந்துள்ள 1.2 ஏக்கர் உபேர்-லக்ஸ் சொகுசு பங்களாவை சந்தை மதிப்பைவிட குறைவான விலைக்கு வாங்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

யெஸ் வங்கியில் இருந்து அவந்தா குழுமத்துக்கு ரூ.400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சொத்து மதிப்பு குறைவாகக் காட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.550 கோடி எனவும், இதை ரூ.378 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும், அந்நிறுவனம் செலுத்த வேண்டிய கடன் தொகை வாராக் கடனாகவங்கிக் கணக்கில் காட்டப்பட்டுள்ளதாகவும் செய்தித்தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார்.

இந்த சொத்தானது பிளிஸ்அபோட் நிறுவனம் வாங்கியுள்ளது.முறைகேடாக இந்த சொத்தை வாங்கிய நிறுவனத்தில் கபூரின் மனைவிபிந்துவும் இயக்குநர்களில் ஒருவராக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தவிர ராணா கபூருக்கு ஆதரவாக ரூ.1,360 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த கடன்தொகையானது தாபர் குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜோஷி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்