வளரும் டாஸ்மாக்கும் – தொடரும் குற்றங்களும்..

ஒரு மகளின் தந்தையாக ஒவ்வொருவரையும் நிலைகுலைந்து போக வைத்த நிகழ்வு..

ஆண்மைத் திமிரும், தினவும், வெறியும், அராஜகங்களும், அற்பத்தனங்களும் …

போதைக்கு அடிமைையாகி |அது தலைக்கேறி சாகசம் என்ற பெயரில் எத்தனை மனித உயிரை இரையாக்கப் போகிறதோ.. தெரியவில்லை ..

பசியடங்குமா?

இன்னும் எத்தனை மனிதர்களின் வாழ்வை சிதைத்துப் போடும் …

இந்த டாஸ்மாக்கும்

_குடிவெறியர்களும்..

ரமேஷ் ,

மக்களுக்கு சேவை செய்யும் ஒரு மருத்துவர் மட்டுமின்றி எல்லோரையும் போல அன்பான குடும்பத்தலைவன் .

ஒரு மகளின் தந்தை. சமூகத்தின் மேல் தீராக்காதல் கொண்ட செயற்பாட்டாளர்.

மூன்று போதை வெறியன்களின் மோட்டர்பைக் சாகசத்திற்குத் தன் மனைவியை நேற்று பலிகொடுத்துவிட்டு நடுரோட்டில் உட்கார்ந்து டாஸ்மாக்கை அகற்றினால் தான் தன் மனைவியின் உடலை எடுப்பேன் என ரோட்டில் உட்கார்ந்து தர்ணா பண்ணிக்கொண்டு இருந்தார்.

அதாவது

சம்பந்தப்பட்ட அந்த ஆனைகட்டி பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையை அகற்றப் போராடினார்.

ஆனால் அவருக்கு எப்படி தெரியும். அது அவ்வளவு சீக்கிரம் அகற்ற முடியாது என்பது.

அது ( டாஸ்மாக்)புற்றீசல் போல் வளருமே தவிர அடங்காது என ..

முன்னாள் முதல்வர்  செல்வி ஜெயலலிதா அவர்கள் படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவேன் என்றார்கள்..

ஆனால் படிப்படியாக டாஸ்மாக் பிசினஸ் சூடு பிடித்து படிப்படியாக உயர்ந்து இன்று ஆல் போல் அல்லவா தழைத்து  செழித்திருக்கிறது.

என்ன செய்ய ..

மொத்த வருமானமும் அதிலிருந்து தானே..

– – – – –

ஆனால் ஆனைகட்டியில் தன் மனைவியைப் பறிகொடுத்த  டாக்டர் ரமேஷ் தன்னுடைய மகள் அந்த விபத்தில் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் கிடக்கிறாள் என்பதோ

,தன் தாய் இறந்தது அவளுக்கு இந்த நிமிடம் வரை தெரியாது என்பதோ புரியாமல் பித்துப் பிடித்தது போல் நடுரோட்டில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

நினைத்துப் பாருங்கள் சோகத்தை ..

அந்தக் குடும்பம் செய்த தவறு என்ன ?

வேலை வெட்டி இல்லாமல் , எல்லா சமூக மதிப்பீடுகளையும் தலைமுடி யென உதிர்த்துவிட்டு, அறியாமைத் திமிரேறி , பெண்ணைத் தின்பண்டமாய் நினைத்து நாக்கில் எச்சில் ஒழுகும் பொறுக்கி கதாநாயகர்களின் ரவுடி பிம்பத்தை சொந்த வாழ்க்கையில் பிரதி செய்யும் ஆண்வெறியன்களுக்கு மற்றவர்கள் உயிர்  ஊதி எறியும் சிகரெட் துண்டாகத் தான்  இருக்கிறது ..

எந்த விவஸ்தையும் இல்லாத மூன்று பொறுக்கிகளின் பைக் சாகசத்திற்கு அவள் அம்மா பலியாகிப் போனதை அந்தப் பிள்ளைக்கு அவள் அப்பா எப்படிச் சொல்வார் ?

சோகம்.. சோகத்தின் சோகம்.

டெயில் (பீஸ்) நியூஸ்..

:_தற்காலிகமாக  டாஸ்மாக் கடை அந்த இடத்தில் மூடப்பட்டது.

 

மிஸ்டர் நச்:-

—————————————-அது சரி …இதை ஏன் எந்த ஊடகமும் பெரிதுபடுத்தவில்லை..

ஒரு வேளை ???….

 

ராஜகர்ஜனை ( சமூக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன