வெடிக்கும் செல்போன்கள் – தப்பிப்பது எப்படி?

செல்போன் தீப்பிடிக்கும் நேரத்தில் தப்பிப்பது எப்படி?

சமீபத்தில் புதுடெல்லியில் ஒரு ஸ்மார்ட் போன் சப்தத்துடன் வெடித்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு பரபரப்பாகியது .
செல்போன் டெக்னீசியன் ஒருவர் ஸ்மார்ட் போனில் உள்ள

செயலிழந்த பேட்டரியை மாற்ற முயற்சி செய்கிறார். அப்போது  எதிர்பாராதவிதமாக ஸ்மார்ட் போன்  வெடித்து தீ பிடித்துள்ளது.

அவர் உடனே அந்த போனை டேபிளில் இருந்து தரையில் தள்ளிவிட்டுள்ளார். பின்னர் அவர் தீயை அணைப்பதற்காக அந்த ஸ்மார்ட் போனை தனது ஷூ காலால் மிதித்துள்ளார்.  அந்த டெக்னீஷியன் செய்தது முட்டாள்தனமான செயல் என்பதற்காகத்தான் இந்த Uதிவு.

அனேகமாக வெடிக்கும் செல்போன்கள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே சகஜமாக பரவி வருகிறது.
மக்களும் மிகவும் ஜாக்கிரதையாகத்தான் உள்ளார்கள்.

ஆனால் அதிக நேரம் சார்ஜில் இருந்தாலோ, அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்தாலோ, வெப்பத்தில் செல்போன் இருந்தாலோ ,அழுத்தம் காரணமாகவோ வெடிக்க வாய்ப்பு உள்ளது.

(ஹெல்மெட் உள்ளே செல்போன் வைத்து பேசுவது, நீண்ட நேரமாக இடுப்பில் அல்லது இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் -ல் செல்களை வைத்திருப்பது, இரு சக்கர வண்டியின் டேங்க் பேக்கில் போன்களை வைப்பது போன்றவை மிகவும் ஆபத்தானவை)

பார்த்துக் கொள்ளுங்ங்கள்…

டெக்னிசியன் ஒருவரே இந்த நிலைமைக்கு ஆளான பிறகு இதைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும்.

இப்படி வெடித்து எரிவதற்கு காரணம் லித்தியம் எனப்படும் அதிவேக வெப்பத்தை வெளியிடக்கூடிய பேட்டரியால் தான்.

ஸ்மார்ட் போன் தீப்பிடிக்கும்போது, பெரும்பாலானவர் செய்யும் தவறான செயல்கள் வருமாறு:

* போன் வெடித்து தீ பிடித்தவுடன் அதை தரையில் கீழே தள்ளிவிடுவார்கள். போனில் பிடித்த தீயை செருப்பு காலால் அல்லது ஷூவால் மிதித்து அணைக்க முயற்சிப்பார்கள்.
* சணல் பை அல்லது கணமான துணியை அதன் மேல் போட்டு மூடி தீயை அணைக்க முயற்சி செய்வார்கள்.
* சிறிய செம்பு அல்லது வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அதன் மேல் ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்வார்கள்.

* தீ எரியட்டும் என்று விட்டுவிட்டால், அருகில் இருக்கும் சோபா பர்னிச்சர் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களில் தீப்பிடித்து எரிந்துவிடும் அபாயம் உள்ளது.
* சரி அப்படியே தீயை அணைக்காமல் விட்டுவிடுவதா என்று கேட்கத் தோன்றுகிறதா? அப்படி ஒன்றும் விட்டுவிட வேண்டாம்.. என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
*  ஸ்மார்ட் போன்களில் அதிக அளவில் எரிசக்தி உள்ளது. அதில் உள்ள லித்தியம் அயர்ன் பேட்டரி தீ பிடித்து எரியும்போது, 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளிப்படும்.

தீயை அணைக்க நீங்கள் முயற்சி செய்யும்போது, உங்களது செருப்பு  அல்லது ஷூவையும் காலையும் எரித்துவிடும் சக்தி கொண்டது. அதேபோல், சணல் மற்றும் துணியால் மூடி அணைக்க முயன்றால் அவற்றையும் எளிதில் எரித்துவிடும் சக்தி உடையது.

600 டிகிரி செல்சியஸ் என்பது அலுமினியம்  உலோகத்தை உருக்கக் கூடியது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விழிப்புடன் பதட்டமின்றி செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம்.

 

தீயை அணைக்க..

* தீப்பிடித்த போனை, ஏதாவது கம்பி போன்ற பொருளால் உடனே கான்கிரீட் தரையில் தள்ளிவிடுங்கள். கையினால் எக்காரணத்தையும் கொண்டு தள்ளிவிட முயற்சி செய்யாதீர்கள்.
* அந்த போன் தரையில் விழுந்த இடத்தில் எளிதில் தீபற்றக்கூடிய பொருள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
* தீ பிடித்த போனின் அருகில் செல்லாதீர்கள். அந்த போனில் இருந்து வெளியாகும் புகையை சுவாசிக்காதீர்கள். மூக்கை ஒரு துணியால் மூடிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதில் இருந்து வெளியாகும் நச்சு புகை உங்களுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும்.
* உடனே பிரிட்ஜை திறந்து ஏதாவது ஒரு பாத்திரத்தில் அல்லது பாட்டிலில் குளிர்ந்த தண்ணீரை எடுத்து எரியும் போனில் மெதுவாக ஊற்ற வேண்டும். (மிகக் குளிர்ந்த நீர் என்றால் சீக்கிரம் உயர்நிலை வெப்பம் கட்டுக்குள் வரும்)

மெதுவாக தீயானது அணைந்துவிடும். ஊற்றக் கூடிய தண்ணீர் சாதாரணமாக இருந்தால் பயனில்லை. மிகக் குளிர்ந்த நீராக  இருக்க வேண்டும்.
இருந்தால் தீயணைப்பு கருவியைக் கொண்டும் தீயை அணைக்கலாம்.

ஒன்றும் முடியவில்லை என்றால்
மணல் இருந்தால் அதை அதன் மேல் கும்பலாக போட்டு அணைக்கலாம்.
விழிப்புடன் இருப்போம்.- நன்றி

டெய்ல் பீஸ் :-

——————————–

.மக்களும் தரமற்ற செல்போன்களை வாங்குவதை தவிர்த்து வருகிறார்கள் இருந்தாலும் விழிப்புடன் இருப்பது இந்த செல் போன் யுகத்தில் மிகவும் நன்மை பயக்கும்.

ராஜ கர்ஜனை ( சமூக விழிப்புணர்வு)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன