146 நாட்களுக்குப் பிறகு இன்று அரண்மனை திறக்கப்பட உள்ளதால் சுற்றுலா பயணிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் பத்மநாபபுரம் அரண்மனையும் ஒன்று. இந்த அரண்மனை, கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி முதல்மூடப்பட்டது. தற்போது தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கேரள அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பத்மநாபபுரம் அரண்மனை மட்டும் திறக்கப்படாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் முக்கிய சுற்றுலாத் தலமான பத்மநாபபுரம் அரண்மனையை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் அரண்மனையை திறக்க வேண்டும் என கோரிக்கையை புதிய தலைமுறை தொடர்ந்து செய்தி வெளியிட்டது. தற்போது கேரள அரசு இன்று முதல் அரண்மனையை திறக்க உத்தரவிட்டுள்ளது.