எங்களை பற்றி
நமது ராஜ கர்ஜனை அதிகாரபூர்வமாக 2017 ம் ஆண்டு மாதமிருமுறை இதழாக மாநில, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் கடிதத்தோடு துவங்கப்பட்டது, இருந்த போதிலும் பல வருடங்களாக எமது மக்களைப் பற்றியே ராஜ கர்ஜனையின் சிந்தனை வட்டம் சுற்றிக் கொண்டே இருந்தது. ஏனெனில் மக்கள் அவரவர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறிந்திருந்தும், கேட்கத் திராணியற்று முடங்கித்தான் போகின்றனர்..நம்மைச் சுற்றி நடப்பதைப் பற்றி ஒரு பெரிய சமூகப் பார்வையாக மக்கள் உந்துதல் பெற வேண்டியும்,சமூக விழிப்புணர்வை உருவாக்கவும், சமுதாய மதிப்பிற்கு வேலை செய்யவும், சமூக மனப்பான்மைக்காக பணியாற்றவும், நமது மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் நம் இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டது நமது ஊடகம்.
எமது இயக்குனர் திரு. ஜே பி நீல் மக்களின் நன்மைக்காக இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னைப் பற்றியும், தன் சுற்றத்தைப் பற்றியும், தான் வாழும் தேசத்தைப் பற்றியும் அறிவது அவசியம். மக்களின் சமூக நலனுக்காகவும் உலகம் முழுவதிலும் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவும் மிகவும் ஆர்வத்துடன் இந்நாட்டிற்கு சேவை செய்யத் தயாராக இருக்கும் இளைஞர்களோடு நாங்கள் ஒரு குழுவினராக வேலை செய்கிறோம்.
நாட்டு நடப்பு, நகரம், அரசியல் மன்றம், கல்வி இவற்றில் விழிப்புணர்வு, தரமான கல்வி வாயிலாக முன்னேற்றம், இளைஞர்களுக்கான கல்வி சார்ந்த மற்றும் அவர்களின் எதிர்கால வேலைவாய்ப்பு வழிகாட்டுதலுக்கான நுண்ணறிவு இவற்றில் மிகுந்த கவனம் செலுத்துகிறோம்.மேலும், நமது சக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் இன்னல்கள் உள்ள பகுதியில் நமது நிபுணர்கள் கவனம் செலுத்திவருகிறார்கள் . எப்பொழுதும் எங்கள் நிறுவனரிடம் சுதந்திரமாக தங்கள் கருத்தை பரிமாறலாம்.
“நாங்கள் மக்களின் நல்வாழ்வுக்காகப் பணியாற்றி வருகிறோம். மக்களுக்கு அவர்களின் பங்களிப்புகளையும் பொறுப்புகளையும் அறிந்து கொள்ள உதவுகிறோம். எங்கள் சமுதாயத்தின் மற்றும் சமூகத்தின் சமூக நன்மைக்காக கடுமையாக உழைக்க நாங்கள் முயற்சி செய்கின்றோம்.”