தறி கெட்டு தடுமாறிய தண்ணீர் லாரி – பலியான பால் மணம் மாறாத பச்சிளம்

பம்மலில் பச்சிளம் குழந்தை பலி
——————————————————-
தடுமாறிய தண்ணீர் லாரி
——————————————–
சிக்கிய குன்றத்தூர் குடும்பம்

பால் மணம் மாறாத பச்சிளம்

————————————————–
இன்று 02 – 08-2019 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் நோக்கி ராஜாராம் என்பவர் தன் குடும்பத்துடன் சென்று கொண்டு இருக்கிறார்.

பம்மல் அருகே வந்தவுடன் பயமுறுத்திக் கொண்டே வந்த தண்ணீர் லாரி அதன் போக்கில் போனதின் விளைவு

 

ராஜாராம் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது. குடும்பத்துடன் பயணித்த அவர் சமாளிக்க முடியாத காரணத்தினால் லாரியில் சிக்குண்டார்.
அங்கு ஒரு கோர விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறியது.

 

பரிதாமாக தண்ணீர் லாரி மோதிய விபத்தில் 1 – 1/4 வயது உடைய சிந்து என்ற பச்சிளம் மாறாத சிசு சம்பவ இடத்திலேயே கோரமாக பலியானது.

 

தாய் சர்வேஸ்வரி பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரில் குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

 

மேலும் இது குறித்து லாரி டிரைவர் கோவிந்தசாமி (வயது 46) ஐ கைது செய்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள்னர்.

மிகக் குறுகிய ரோட்டில் எவரும் நிதானமாக செல்வதில்லை. அதுவும் கனரக வாகனங்கள் குறுகிய சாலையையும் அவர்கள் Highway மாதிரி நினைப்பதும் / தண்ணீர் லாரிகள் எதைப் பற்றியும் கவனிக்காமல் அவர்கள் போக்கில் செல்வதும் தான் இந்த மாதிரி பேரிழப்பிற்கு காரணம்.
ஆவண செய்வார்களாக அரசும், அதிகாரிகளும்.

விழிப்புணர்வு : எதிலுமே அவசரம் வேண்டாம்.

ராஜகர்ஜனை ( சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன