நாகையில் பரபரப்பு..மாணவனை கண்டித்ததால் FIR போட்ட தந்தை

*ஆசிரியரின் பணி அரும்பணி*

*சர்ச்சையான ஆசிரியரின் கண்டிப்பு*

வளரும் சமுதாயத்தை வழி தவறவிடாமல் கொண்டு செல்லும் பொறுப்பு பெற்றோருக்கு இருந்தாலும் கூட அதை விட அதி முக்கியமான பொறுப்பு ஆசிரியர்களுக்குத்தான் இருக்கிறது என்பது நிச்சயமான உண்மை.
*இப்படி கூடுதல் சுமையை பெற்ற ஆசிரியர்கள் என்றும் அலட்சியமாக இருப்பதில்லை*. *மாணவர்களுக்கு பாடம் நடந்துவதோடு முடித்துக் கொள்ளாமல் அவர்களை கவனித்துக் கொள்வது, நண்பனாக பழகுவது மற்றும் நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுப்பது வரை அயராமல் செய்து அவர்களை விலையுயர்ந்த முத்துக்களாக மாற்றி நமக்கு (பெற்றோருக்கு) அளிக்கிறார்கள்”.

இதையெல்லாம் விட முழு முயற்சியெடுத்து நல்ல எண்ணங்களை மனதில்
உருவாக்கி அவர்களை படிப்பில் நாட்டம் வரச் செய்யும் வரை உழைக்கும் உத்தமமான நல்ல ஆசிரியப் பெருமக்களும் அவனியில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

*அத்தனையும் செய்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு அவ்வப்பொழுது அவப்பெயரும் ஆங்காங்கே தலை தூக்கத்தான் செய்கிறது*

*அதைப் பற்றித்தான் இந்த கட்டுரை* …

கடந்தமாதம் அந்தி மயங்கும் நேரம் நம் அலுவலகத்திற்கு ஒரு போன் கால் வருகிறது.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நாகப்பட்டினம் என்ற ஊரில் இருந்து நம்முடைய ரிப்போர்ட்டர் அவர்கள் போன் செய்கிறார்கள்..

என்ன விஷயம் தெரியுமா ?

ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சியின் பெயரை சொல்லி அதில் Scroll ஓடிக்கொண்டிருக்கிறது அதை பாருங்கள் என்று சொல்கிறார்.

அதில் போய்க்கொண்டிருந்த செய்தி…
*மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியர்* – பரபரப்பு – *தலைமையாசிரியர் மாயம்*…

சற்று நேரத்தில் மற்றுமொரு தொலைக்காட்சியில் செய்தி..

(நமக்கு Shock ஆகிறது.ஏனெனில் அந்த School நன்கு பல ஆண்டுகளாக நல்ல பெயர் வாங்கியது. பலராலும் பாராட்டப்பட்ட கிருத்துவ பள்ளி அது.)

எனவே நாமும் சிரத்தை எடுத்து ..

தம்பி கொஞ்சம் கவனிங்க .. “என்ன மேட்டர்னு பாருங்க “என்று நம்முடைய நிருபருக்கு தகவல் தெரிவிக்கிறோம்..

அடுத்த நாள் நமது நிருபர் அந்தப் பள்ளிக்கு செல்லும் முன்பே அங்குள்ள ஏரியா பிரபல தினசரியில் அந்த செய்தி கடுமையாக சித்தரிக்கப்பட்டு அந்த பையனில் படம் மற்றும் அடித்த இடம் இவற்றையெல்லாம் விலாவாரியாக சாடி எழுதியிருந்தார்கள்..

 

நாமும் சற்று கோபத்துடனே அந்தப் பள்ளி உள்ளே சென்று நடப்பது என்ன என்று பார்க்கச் சொல்லும் போது செய்தி ஏதும் புலப்படாமல் நமது நிருபர் தலைமை ஆசிரியர் செல்போன் எண்ணை மட்டும் எப்படியோ கொண்டு வந்து விட்டார்.

இரண்டொரு நாட்கள் கழித்து நாம் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டோம்

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும்பொழுது தலைமையாசிரியர் அதைப்பற்றி பேச விரும்பவில்லை.

*மன்னிக்கவும் அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.மேலிடம் இருக்கிறது அவர்களின் அனுமதியின்றி நான் எதுவும் பேச முடியாது*… இந்த விஷயம் எதுவுமே இல்லை ..
பெரிதுபடுத்தி விட்டார்கள் என்று சொல்லி முடித்துக் கொண்டார்*..

 

*அதன் பிறகு நமது *கர்ஜனை டீம் களத்தில் இறங்குகிறது*..

அந்தப் பையன் யார் ?அந்த பையனின் நண்பர்கள் யார்? யார்? என்ற கோணத்தில் நமது ஆய்வு போனது..

இப்படியாக அந்த பையனுடைய குடும்பம் எங்கு இருக்கிறது?உண்மை காரணம் என்ன?
இப்படி சிறிது சிறிதாக துருவித்துருவி நாம் விசாரித்துக் கொண்டிருக்கிறோம்..
இந்த நேரத்தில் உண்மை விஷயம் கசியத் தொடங்குகிறது.

*விஷயம் கொஞ்சம் விவகாரமாகத்தான் சென்றிருக்கிறது*.

எட்டாம் வகுப்பு படிக்கும் மூன்று பேர் கூட்டு சேர்ந்து கொண்டு பெண் பிள்ளைகளை அதாவது மாணவிகளை கலாய்ப்பது, சீண்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அந்த நிகழ்வு நடந்த அன்றைய தினம் .. அந்த மூன்று ஹீரோக்களும் பெண்கள் பாத்ரூம் அருகில் நின்று கொண்டு கிண்டல் செய்து இருந்திருக்கிறார்கள்.
அப்படியே எண்ணம் சூடேறிப்போன அவர்கள் அந்த மாணவிகளை கலாய்த்தது மட்டுமன்றி அவர்களின் கால்களில் இவர்கள் கால்களை விட்டு இடறி விழச் செய்திக்கிறார்கள்.


செல்வதறியாது பயம் மற்றும் அவமானம் தலைக்கேறிய மாணவிகள் தலைமையாசிரிடம் முறையிடவே அங்கு வந்த உடற்பயிற்சி ஆசிரியர் அந்த மூன்று பேரையும் கண்டித்து கவனித்திருக்கிறார்.

இது பெண்கள் விஷயம் என்பதால் இத்தோடு விட்டிருக்கிறார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட அந்த பையனின் அப்பா ( சலீம் ராஜா) இதை மிகவும் பெரிதுபடுத்தி போலீஸ் ஸ்டேசன் வரைக்கும் சென்று FIR போட்டிக்கிறார்.

இந்த கோணத்தில் நாம் விசாரிக்கும் பொழுது நமக்கு அந்த பையன் மட்டும் அடி வாங்கவில்லை .இவனைச் சேர்ந்து மூன்று பேர் அடி வாங்கியிருக்கிறார்கள் என்ற விஷயம் வெளிவரவே FIR போட்ட சலீம் ராஜாவை தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போகவே அடி வாங்கிய இன்னொரு பையனின் தகப்பனாரை தொடர்பு கொண்டோம்.

*அடிபட்ட பையனின் தகப்பனார் அவன் நண்பனின் தகப்பனார் இருவருமே இசுலாமியர்கள்* .-பிள்ளைகளை படிக்க வைத்தது கிறிஸ்டியன் ஸ்கூலில்* ..

அவர் ( இன்னொரு பையனின் தந்தை) இவ்வளவு களேபரங்கள் நடந்தேறியும் கூட மிகத் தெளிவாக பொறுப்பான பெற்றோருக்கு உரிய இயல்போடு பேசியது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தை உண்டு பண்ணியது…..

அவரின் பெயர் தவுலத்.
அவர் நம்மிடம் பேசும்போது “சார் என்னுடைய பையன் தான் நிறைய அடி வாங்கி இருக்கான்.
ஏன்னா பையன் பண்ணது தப்பான வேலை. அதை கண்டிக்க வேண்டிய உரிமை கண்டிப்பா ஆசிரியருக்கு தான் சார் இருக்கு .நம்ப அத கேட்டு பையனுக்கு சப்போர்ட் பண்ணினால் நம்முடைய பையன் லைப் கெட்டுப் போயிடும் இல்லையா? ” என்றாரே பார்க்கலாம்.

பையனுக்கு சப்போர்ட் செய்து அந்த பள்ளியை மற்றும் ஆசிரியரை பழிவாங்குவேன் என்று கூறும் முதலாமவர் ( FIR போட்டவர்) சலீம் ராஜா ஒரு புறம்..

ஆசிரியருக்கும், பள்ளிக்கும் சப்போர்ட் செய்து பையன் லைப் தான் முக்கியம் என நினைக்கும் இன்னொரு பையனின் தந்தை தவுலத் மறுபுறம்..

நினைத்துப் பாருங்கள். எது சரியான வழிமுறை என்று.

அவர் மேலும் கூறுகையில் நான் என் பையனை கண்டித்து விட்டேன். பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் வசம் மன்னிப்பும் கேட்டு விட்டேன்.
மேலும் சலீம் ராஜாவிற்கு போன் பண்ணி நம்முடைய பசங்க பண்ணியது தவறு. மேற்கொண்டு வேறு எதுவும் முயற்சி எடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டேன் சார்..

ஆனால் அவர் “நான் இத சும்மா விட மாட்டேன் .. நம்ம மார்க்கத்திற்கு எதிரா தாடியை ஷேவ் பண்ணு முடிய சரியா வெட்டுன்னு சொல்றாங்க. பழய கணக்கு ஒன்னு இருக்கு.. பார்த்துக்கலாம் என கூறி போனை துண்டித்து விட்டார் ,சார்

ஆனால் புள்ளைங்க வாழ்க்கை தானே நமக்கு முக்கியம் எனவும் கூறி நம்மை பிரமிக்க வைத்தார்.

முன்றாவதாக சம்பந்தப்பட்ட பையனின் குடும்பம் இந்து மதத்தை சார்ந்தது. அவர்களும் பையனை கண்டித்து பள்ளிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடதக்கது.

*டெயல் பீஸ்*..
———————-

சலீம் ராஜா கேசை வாபஸ் வாங்கவில்லை. கோர்ட்டில் பார்க்கலாம் என்ற இறுமாப்பில் உள்ளார். சம்மந்தப்பட்ட அவரது மகன் TC ஐ அந்த பள்ளியில் இருந்து வாங்கி செல்ல எத்தனித்து அதிலும் சர்ச்சையை கிளப்பி கொண்டிருப்பதாக தகவல் – ..

*விழிப்புணர்வு* :-
————————–

எல்லா ஆசிரியரும் பிள்ளைகளை வேண்டும் என்று அடிப்பதில்லை. எதோ தவறு இருந்தால் தான் திருத்துவதற்கு தான் கண்டிப்பு என்ற பெயரில் அது இருக்கும்.
இப்படி எல்லோரும் போர்க்கொடி தூக்கினால் நம்முடைய பிள்ளைகள் எதிர்காலம் தான் பாதிக்கும். எதையும் தீர விசாரிப்பது நன்மை தரும்..

ராஜகர்ஜனை ( சமுக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன