குன்றத்தூரில் சிக்கிய “பலே ” கொள்ளையர்கள்

வேலையாட்களாக வேஷம்

பூட்டிய வீடுகளில் நோட்டம்

இரவில் துணிகர கொள்ளை

– 3 பேர் கைது*

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் காலையில் பெயின்டிங் வேலை செய்வது போல் நடித்து, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு இரவில் கொள்ளையடித்து வந்த மூன்று கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

குன்றத்தூர் சர்வீஸ் சாலையில் நேற்று முன்தினம் மாலை

குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில்

போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஆட்டோவை மடக்கி, அதில் வந்த 3 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் தீவிர சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை சோதனை செய்தபோது,

அதில் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டு, உள்ளே நகைகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது அதிர்ச்சியடைந்த போலீசார். அவர்களை குன்றத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தங்கள் பாணியில் விசாரிக்கும் போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

மேலும் விசாரணையில், அவர்கள் சென்னை ஓட்டேரி, சத்தியவாணி முத்து நகரை சேர்ந்த முருகன் (36), எஸ்.வி.நகரை சேர்ந்த பிரான்சிஸ் (28) மற்றும் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த செல்வம் (32) என தெரியவந்தது.

இவர்கள் புறநகர் பகுதிகளில் பகல் நேரங்களில் பெயின்டிங் வேலை செய்வது போல் நடித்து, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாகவும், அப்பணத்தில் ஜாலியாகவும்,அழகிகளுடன் உல்லாசமாகவும் இருந்ததாகவும் கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து நேற்று காலை 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

┈┉━•• * ••━┅┉┈
வயிற்றுப் பிழைப்புக்கு திருடினேன் என்று திருடன் சொல்லும் காலம் போய்
உல்லாசத்தின் உச்சிக்காக திருடும் காலம் அரங்கேறியிருக்கிறது.

காவல்துறை இவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்..
மட்டுமல்லாது பொது மக்களும் உஷாராக இருத்தல் அவசியம்

ராஜகர்ஜனை (சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன