நடு ரோட்டில் பிரசவம்.. இன்ஸ்பெக்டர் சித்ராவின் மனித நேயம்.

 

சென்னை சூளைமேடு

அதிகாலை 3 மணி.

பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் ..

பிரசவம் பார்த்து உதவிய உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்.

நடுரோட்டில் படுத்து புரண்டு கதறிய நிறைமாத கர்ப்பிணி.. கடவுளாய் வந்த இன்ஸ்பெக்டர் சித்ரா!

இன்ஸ்பெக்டர் சித்ராவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது..

சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் பானுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணி. கணவர் நைட் டியூட்டி வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாருமே இல்லை. விடிகாலை 2.45 மணி இருக்கும்.. பானுமதிக்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலி எடுத்திருக்கிறது.
இதனால் பயந்துபோன பானுமதி, தானே வலியுடன் மெதுவாக எழுந்து ஒரு ஆட்டோவை பிடிக்க ரோட்டுக்கு வந்துள்ளார். ஆனால் அந்த நேரம் பார்த்து ஒரு ஆட்டோவும் வரவில்லை. அதற்கு மேல் பானுமதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

வலியுடனே, சூளைமேடு ஹைவேயில் அப்படியே படுத்துவிட்டார்.. கை கால்களை உதைத்து கொண்டு துடித்தார்.. அந்த சமயம் பார்த்து, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சூளைமேடு இன்ஸ்பெக்டர் சித்ரா ஜீப்பில் வந்தார்.

பானுமதியின் நிலைமையை பார்த்ததும் பதறி போனவர், தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி கொண்டு ஆஸ்பத்திரி போகலாம் என்று முயன்றிருக்கிறார்.

ஆனால், பனிக்குடம் உடைந்து போனதையும், ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததையும் கண்டு, அதிர்ச்சி அடைந்தார். அந்தநிலையில் ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்வதும் சரிவராது என்று உணர்ந்தார். அதனால் தன்னுடைய ஜீப்பை எடுத்து கொண்டு, அந்த பகுதியில் குப்பை சேகரிக்கும் பெண்களை துணைக்கு அழைத்தார்.
அவர்களின் உதவியுடன் பானுமதிக்கு இன்ஸ்பெக்டர் சித்ரா பிரசவம் பார்த்தார். கொஞ்ச நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதன்பிறகு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அதில் பானுமதியை, குழந்தையுடன் பத்திரமாக ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


இப்போது தாய்-சேய் நல்ல சவுக்கியத்துடன் இருக்கிறார்கள். இன்ஸ்பெக்டர் சித்ராவின் இந்த துணிச்சல் நிறைந்த காரியத்துக்கும், உயரிய மனிதாபிமானத்துக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

சென்னை காவல்துறை இயக்குனர் ஏ.கே. விஸ்வநாதன் சித்ராவையும், உதவி செய்த இன்னொரு  பெண் காவலரையும் அழைத்து நேரில் பாராட்டு தெரிவித்தார்.

 

டெய்ல் =

நம் ராஜகர்ஜனை சார்பில் மனித நேயத்தை போற்றி சகோதரி சித்ராவிற்கு சல்யூட்….

ராஜகர்ஜனன ( சமூக நலம்)

⬇⬇⬇

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன