கனவுகளுடன் கனடா கிளம்பிய சுபஸ்ரீ …பேனர் கலாச்சாரத்தால் அநிநாய பலி ..

சென்னை தாம்பரம் அருகே பரிதாபம். திருமண வரவேற்பு பேனர் விழுந்து அப்பாவி இளம்பெண் உயிரிழப்பு.*

*சென்னை பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக மெகா பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்பு.*

நிலைதடுமாறி கீழே விழுந்த குரோம்பேட்டையை சேர்ந்த சுபாஸ்ரீ(23) மீது தண்ணீர் லாரி ஏறியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.*

ஆம்.. நினைத்துப் பாருங்கள்.. நண்பர்களே.. எவ்வளவு பெரிய கொடுமை இது.. என்ன பாவம் செய்தார் அவர்.. சம்பவ நிகழ்வுக்கு முன் சற்றாவது அந்த இளம் பெண் இந்த கோரத்தை உணர்ந்திருப்பாரா?.. யாரோ ஒரு சிலரின் அலட்சியம் மற்றும் ஆடம்பரமும் தானே ஓர் உயிரை அனாவசியமாக குடித்திருக்கிறது..

பல முறை பலர் போராடினாலும் (குறிப்பாக டிராபிக் ராமசாமி அவர்களை கூறலாம்) விழித்துக் கொள்ளாத அதிகாரிகளை குறை சொல்வதா?அரசாங்கத்தை குறை சொல்வதா.?

(சம்மந்தப்பட்ட நான்கு பேனர்களில் ஒன்று)

 

ஆனால் பிரச்சினை பெரிதானவுடன் லாரி டிரைவர் மீதும், பேனர் கட்டியவன் மீதும் அரசு 2 வழக்கு பதிவு செய்துள்ளது தவிர சம்மந்தப்பட்டவர் மீது அல்ல..

இதன் வழக்கு அதாவது சட்டவிரோத பேனர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

:*பரங்கிமலை காவல் துணை ஆணையர் பிரபாகர், பள்ளிக்கரணை உதவி ஆணையர் சவுரிநாதன் மாநகராட்சி மண்டல துணை ஆணையர் ஆல்பி வர்கீஸ் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராயினர்.*

*பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசையும், அதிகாரிகளையும் கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தனர்.*

அவை வருமாறு…

1.சட்டவிரோத பேனர்கள் வைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – ..

2 காது குத்து, கடா வெட்டு, கல்யாணம் என எல்லாத்துக்கும் பேனர். இன்னும் விவாகரத்துக்கு மட்டும் தான் அரசியல் கட்சியினர் பேனர் வைக்கவில்லை- நீதிபதிகள் காட்டம்.*

3. மதியம் 2.30 மணிக்கு சம்பவத்திற்கு எட்டு மணிக்கு FIR பதிவு ஏன்?

4.சம்பவ இடத்துக்கு சென்ற போது எத்தனை பேனர் இருந்தது? – காவல் ஆய்வாளரின் பதில் படி 4 பேனர்கள் இருந்ததை ஏன் பதிவு செய்யவில்லை?

5.டிஜிட்டல் பேனருக்கு தடையில்லா சான்று இல்லாமல் வைக்க கூடாது என்பது தெரியுமா? – காவல் ஆய்வாளரிடம் நீதிபதிகள் கேள்வி?*

6.போக்குவரத்து காவல் துறையிடம் அனுமதி பெறாமல் பேனர் வைக்க முடியாது – அதுவும் தெரியுமா?

7.இறந்த இடத்தை ஸ்கெட்ச் செய்துள்ளீர்கள்,அதில் எத்தனை பேனர் வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடவில்லை. ஏன்?
பேனர் வைத்தவருக்கு சாதகமாக செயல்படவா ? அல்லது பேனரில் உள்ள கலர் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்ததா?*

8.பேனர் விவகாரத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்டது வெளிப்படையாக தெரிகிறது.*

9.தலைமைச் செயலரோ,நகராட்சி நிர்வாக செயலரோ பதில்மனுவில் கூறியது போல் செயல்படவில்லை.

பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.*

பேனர் வைக்க மாட்டோம் என அறிவிப்பு விடுத்த கட்சிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.*

மேலும் வழக்கின் விசாரணை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.*

 

எப்படி நடந்தது இந்த விபத்து..

*சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் தமது மகன் திருமணத்துக்காக பேனர்களை சாலையில் வைத்திருந்தார். அந்த சாலையில் பல்லாவரத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.கனடா செல்வதற்கான தேர்வை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் எழுதிவிட்டு சுபஸ்ரீ திரும்பிக் கொண்டிருந்த போது ஜெயபால் வைத்த பேனர்களில் ஒன்று சரிந்து விழுந்தது. பேனர் சரிந்து விழுந்ததால் சுபஸ்ரீ இருசக்கர வாகனத்துடன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கினார் சுபஸ்ரீ. இதில் படுகாயமடைந்த நிலையில்  சுபஸ்ரீ உயிரிழந்தார்.

ஏற்கனவே இதே போல் நிகழ்வு – .

2017-ல் கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு பேனர் சரிந்து ரகு என்கிற இளைஞர் பலியானார். இதனையடுத்து பேனர்கள் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை கடுமை காட்டியிருக்கிறது. ஆனாலும் பேனர் கலாசாரத்தால் அப்பாவி பொதுமக்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. தற்சமயம் எதிர்கால கனவுகளுடன் காத்திருந்த சுபஸ்ரீயின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல தலைவர்கள் இதற்கு மேல் பேனர் வைக்க வேண்டாம் என தங்களது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
“என்ன Uண்ணுவது. அப்பப்போது கண் கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்காரம் என்ற நிலைமை ஆகி விட்டது..

ஸ்டாலின் கண்டனம் –

அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அவருக்கு என் இரங்கல்!அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது? இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..

*அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.*

டெய்ல் .. –

=======

சுமார் 2 மணி நேரம் இந்த கேசை யார் விசாரிப்பது என்ற போராட்டத்திற்கு பிறகு பொது மக்கள் உதவியுடன் சுபஸ்ரீ – ன் உடல் சரக்கு ஆட்டோவில் ஏற்றப்பட்டது..

மனித உயிர்களுக்கு இவ்வளவுதான் மதிப்பா.? எவ்வளவு பெரிய நிலையில் இருந்தாலும் உயிர் என்பது ஒன்றுதானே..

ராஜகர்ஜனை ( சமூக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன