குறை தீர குரல் – 2. திருப்பூர் சாலையில் உயர் அழுத்த மின் கம்பி

*குறை தீர்க்க குரல் கொடுப்போம்.*

*செய்தி – 2*
*திருப்பூர் . பெறப்பட்ட தேதி ஆகஸ்ட் 25*

திருப்பூர் தாராபுரம் சாலையிலுள்ள செட்டிபாளையம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு அருகே செல்லும் வழியில் உயரழுத்த மின்சார கம்பம் கம்பிகள் மரம் உடைந்து விழுந்ததால் பரபரப்பு

*திருப்பூர் மாநகரம்*
தாராபுரம் சாலையிலுள்ள செட்டிபாளையம் மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட எல்லை.*

அரசு தலைமை மருத்துவமனைக்கு அடுத்த செட்டிபாளையம் பிரிவு பகுதியிலிருந்து வீரபாண்டி செல்லும் வழியில் வீரபாண்டி காவல் நிலையத்தை அடுத்த தனியார் பள்ளி அருகில்

வீரபாண்டி மெயின் சாலை உயரழுத்த மின்சார கம்பம் கம்பிகள் மரம் உடைந்து விழுந்து பல மணிநேரம் ஆகியும் தற்போது வரை அப்புறப்படுத்த வில்லை என்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
உயரழுத்த மின்சார கம்பம் கம்பிகள் சேதமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்ஜனையின் நாமும் கோரிக்கை விடுக்கிறோம்.

*டெய்ல்*: அந்த ஏரியா நிருபர்கள் மற்றும் பொது மக்கள் நிலைமையை நமக்கு தெரிவிக்கலாம்.. நன்றி.

ராஜகர்ஜனை ( சமுக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன