டிக் -டாக் விபரீதம்.. பெண்ணும் பெண்ணும் ஒட்டம்…

மீண்டும் டிக் டாக் விபரீதம்.

கல்யாணமான நர்ஸ் ஒருவர்.. 50 சவரன் நகையுடன் டிக்டாக்கில் அறிமுகமான தோழியை இழுத்து கொண்டு ஓடிய சோகம்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் வசம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினோதினி. இவருக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் போன ஜனவரி மாதம் கல்யாணம் இனிதே நடந்தது.

இதற்கிடையில் இருவரும் சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆரோக்கிய லியோ கட்டிய புது மனைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இதனால் கணவரைப் பிரிந்து தனிமையில் அவதிப்பட்ட வினோதினி டிக்டாக் ஆப்பில் நுழைந்து நேரத்தை செலவிட ஆரம்பித்தார். அப்போது டிக் ட- டாக் மூலம் சிக்கிய திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டது. பழக்கம் நாளடைவில் நெருக்கம் ஆகி பசை மாதிரி ஒட்டிக் கொண்டது…

நிலைமை இப்படி இருக்க வெளிநாட்டில் லியோ கஷ்டப்பட்டு வேலை பார்த்து மனைவிக்கு அனுப்பும் பணத்தை ஆடம்பரமாக அபிக்கு செலவு செய்து ஆட்டம் போட்டு வந்துள்ளார் வினோதினி…

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, புது மனைவியை பார்க்க ஆசையுடன் லியோ வெளிநாட்டில் இருந்து வந்தார். ஆனால் மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்தது. இதனால் வினோதியின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் “நெருக்கமான” போட்டோக்களை கண்டு அதிர்ந்தார்.

இதையடுத்து அவர்கள் வீட்டில் வெடித்தது புயல். மனைவியை மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்று நடந்த விஷயங்களை கூறி அறிவுரைகளை கூறியுள்ளார் லியோ. அதன் பிறகு எத்தனை பேர் புத்தி சொல்லியும் வினோதினி கேட்கவே இல்லை..

டிக் டாக் மூலம் கிடைத்த பெண் நண்பியின் நெருக்கம் மட்டுமே பெரிதாக நினைத்து மோகம் தலைக்கேறி கடைசியில் கணவர் தனக்கு அணிவித்த 20 பவுன் நகையை மட்டுமன்றி தன்னுடைய அக்காவின் 25 பவுன் நகைகளையும் எடுத்துக் கொண்டு மாயமாகிவிட்டார் வினோதினி.

அபியுடன் மகள் ஓடிவிட்டதை அறிந்து, குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் போலீசில் தந்துள்ளனர். இது சம்பந்தமான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

காலம் கலிகாலம்.. வெளிநாட்டு செயலி .. விளைவு வெளிநாட்டு கலாச்சாரம் …

ராஜகர்ஜனை ( சமூக அவலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன