பல கோடி பழங்கால சிலைகள் – கடத்திய தம்பதி – கண்ணி வைத்த போலீஸ்

பல கோடி மதிப்புள்ள சிலைகள்..

தம்பதி சமேதமாக பதுக்கி வைத்த பலே கொள்ளையர்கள் .

வேலூர் சோமநாதேஸ்வர் கோயிலில் பல வருடங்களுக்கு முன் திருடப்பட்ட பஞ்சலோக சிலைகளை தன் வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாட்டிற்கு கடத்திய குற்றத்திற்காக பாண்டிச்சேரியை சேர்ந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுமார் 37 வயதுடைய பிரெஞ்சுப் பெண் மேரி தெரேஸ் ஆனந்தி வனினாவை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலிசார் சென்னை .விமான நிலையத்தில் கண்ணி வைத்து பிடித்தனர்.

புதுச்சேரியின் கோலாஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல கோடி மதிப்புள்ள 11 பஞ்சலோக சிலைகள் தொடர்பான வழக்கு 2016 அக்டோபரில் முதல் நிலுவையில் இருந்து வருகிறது

சம்பந்தப்பட்ட பிரெஞ்சுப் பெண்மணி அவர் நாட்டிற்கு தப்பி ஓடியதை அடுத்து வழக்கை முடிக்க முடியாமல் இருந்தது.

சட்டவிரோத பழங்கால சிலை வியாபாரியான தீனதயாளனின் நெருங்கிய உதவியாளரான புஷ்பராஜனின் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த தேடல் மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து  பல ஆண்டுகள் கடந்ததால் இந்தியர திரும்பினார். அப்பொழுதுதான் சென்னை விமான நிலையத்தில் வைத்து சிலை தடுப்பு பிரிவினர் கைது செய்தார்கள்.

அந்த சிலைகள் வேலூரில் உள்ள மேலபாடி கிராமத்தில் உள்ள சோமநாதேஸ்வர மற்றும் சோலேஸ்வரர் கோயில்களைச் சேர்ந்தவை, அவை 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களுக்கு பிறகு குற்றவாளியும்’ கூட்டாளியும் பிடிபட்டுள்ளனர்.

மேலே படத்தில் உள்ள வனினாவும் அவரது கணவன் பிரபாகரனும் தமிழ்நாட்டில் சிலை திருட்டுக் கும்பல் வசம் இருந்து கோயில்களில் திருடப்பட்ட கலைப்பொருட்களை சட்ட விரோதமாக விலைக்கு வாங்கி புதுச்சேரியில் உள்ள தங்களது வீட்டில் பதுக்கி வைத்து கொழும்பு வழியாக பிரான்சுக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பிரெஞ்சுப் பெண்ணைக் கைது செய்ததன் மூலம், தமிழக ஐடல் விங் சி.ஐ.டி, பல ஆண்டுகளாக திருடப்பட்ட பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பல வருடங்களாக சட்டவிரோதமாக புதுச்சேரியிலிருந்து பிரான்சுக்கு கொழும்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்து வந்த ஒரு கும்பலை கூண்டோடு பிடித்ததாக
சிறப்பு அதிகாரியும் முன்னாள் காவல் ஆய்வாளருமான ஏ. ஜி. பொன் மாணிக்கவேல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

அவர்களது நெட்வொர்க்கின் நம்பகமான தகவல்களின் அடிப்படையில்
பெருநகர மாஜிஸ்திரேட்டிலிருந்து வாரண்ட் பெற்ற பின்னர், சிறப்பு பிரிவு அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் புதுச்சேரியின் கோலஸ் நகர், ஃபிரடெரிக் ஓசனம் தெருவில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்து பல கோடி மதிப்புள்ள 11 பழங்கால வெண்கல சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு சுமார் 200 கோடி ..

பின்னர் மீட்பு தொடர்பாக கிளாசிக் கேலரியின் உரிமையாளர் புஷ்பராஜாஜனை போலீசார் கைது செய்தனர்.

மனைவி மற்றும் கணவன் பழங்கால சிலைகளை சேமித்து வைத்ததில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் பிரான்சில் வசித்து வந்ததால், இந்தியாவுக்குத் திரும்ப வேண்டாம் அவர்கள் உஷாராக அங்கேயே இருந்ததனால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்யவோ அல்லது வழக்கில் மேலும் தொடரவோ முடியவில்லை.

திரு. மாணிக்கவேல் மேலும் கூறும்போது ..
“அவரது தாத்தா ஜோசப் டி கான்டப்பா மற்றும் அவரது தந்தை ஜெரால்ட் ஆகியோர் பழங்கால பொருள்கள் விற்பனையாளர்கள்.
அவர்களின் மறைவுக்குப் பிறகு, அவருக்கும் அவரது சகோதரருக்கும் பழங்கால சிலைகள் உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

பிறகு ரோமன் ரோலண்ட் தெருவில் உள்ள தனது மூதாதையர் இடத்திலிருந்து பழங்கால சிலைகளை கோலாஸ் நகரில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றினார்.

இவற்றில் நான்கு பழங்கால சிலைகள் ₹ 150 முதல் 200 கோடிக்கு மேல் மதிப்புடையவை. வல்லுநர்கள் கூறுகிறார்கள் ”

உள்நாட்டில் சிலை வாங்குபவர்களுக்கு சிலைகளைக் காண்பிப்பதற்காக அந்தப் பெண்ணும் அவரது கணவரும் தங்கள் மேலாளருடன் சாவியை விட்டுச் சென்றிருக்கிறார். அப்படி அங்கு சிலை வாங்க சென்றவர் எடுத்த வீடியோ மூலம் வசமாக போலிஸ் வசம் சிக்கியுள்ளனர்.

இவர்கள் யாருக்கும் சந்தேகம் வாராதபடி பழங்கால விற்பனையாளர்கள் என அதிகாரிகளிடமிருந்து இரண்டு சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர்

ஒன்று கைவினைப் பொருட்கள், மற்றொன்று பழம் பொருட்கள் விற்பனை .. இந்த டெக்னிக் எந்தவொரு இடையூறும் இல்லாமல், கைவினைப் பொருட்களாக கொண்டு செல்லவும், பின்னர் அவற்றை வெளிநாடுகளில் பழம்பொருட்களாக விற்கவும் அவர்களுக்கு உதவியது.

வனினா செவ்வாய்க்கிழமை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் மற்ற சிலைகள் பற்றி விசாரணை நடந்து கொண்டுள்ளது.

இன்னும் எவ்வளவோ ?
ஈசனுக்குத் தான் வெளிச்சம்.

ராஜகர்ஜனை ( சமுக நலம்)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன