(மூன்றாம் கண்) பீனியல் சுரப்பியின் அதி அற்புத பணி ..

மூன்றாம் கண் எனப்படும் பீனியல் சுரப்பி பலராலும் பரபரப்பாக பேசப்படும் ஒரு மாயம் .

மனித உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் பொதிந்து உள்ளன!!. அதை அறிவதற்கு நமக்கு நேரமும் இல்லை ,பொறுமையும் இல்லை.. என்பது தான் உண்மை.

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் மூன்றாவது கண் என்று எல்லோரலும் அழைக்கப்படும் பினியல் சுரப்பி!

 

* நிலக்கடலை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!…
இது செய்யும் வேலைகளை பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் முதலில் நாம் அறிய வேண்டியது என்னவென்றால் இந்த பினியல் சுரப்பி _ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது என்பது தான்.!!

*அதுதான் மெலடோனின் (melatonin)!!*

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது. மட்டுமல்லாது நம்மை நமக்கு புரியவைத்து தன்னம்பிக்கை எனும் தைரியத்தை அளிக்கிறது.

 

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை.
இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

*இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!*
இப்பொழுது புரிகிறதா? நம் முன்னோர்கள் பலர் ஏன் முன்னே உறங்கி முன்னே எழும் பழக்கம் வைத்திருந்தார்கள் என …
அவர்களின் வாழ்க்கைத் தரம், ஆரோக்கியம் என்பதைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
மேலும் அவர்கள் அரிக்கேன் லைட்டை வைத்து வாழ்ந்து இரவு படுக்கும் போது இருளில் தான் தூங்குவார்கள்.

இருளில் தூங்கும் போது பீனியல் சுரப்பியுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10 மணிக்குப் பிறகு இருளில் சுரக்கும் “மெலடோனின் “, நமது இரத்த நாளங்களில் ஆசுவாசமாக பாய்ந்தோடும்.!!

*நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!*

*பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு  நிறுத்தி விடும்!!.

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!.

எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்றும், மற்றும் பலப்பப் நல்ல செயல்கள் செய்யும் எனவும் இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

*அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!*

*அதிகாலையில் எழும் போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!*

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

*எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.*

முன் படுத்து முன் எழுவோம். பீனியலை பாதுகாப்போம். மெலடோனினை முழுமையாக பெறுவோம்..

நன்றி..

ராஜ கர்ஜனை ( ஆரோக்கியம் மற்றும் சமூக நலம்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன