லலிதா ஜூவல்லரி – பலே திருடன் சிக்கினான்..

 

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை .

ஆறு பேரை சுற்றி வளைத்த போலீசார் ..

திருவாரூரில் பிடிபட்ட கொள்ளையன் .

அதிரடியாக  நடந்த விசாரணைையில்  திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக் கடை கொள்ளைச் சம்பவத்தில் துப்பு துலங்கியிருக்கிறது.

திருச்சி போலீஸாரின் அதிரடி விசாரணை மேற்றும் தேடுதல் வேட்டையில் கொள்ளையர்களில் ஒருவன் சிக்கி விட்டான்.

துரதிர்ஷ்டவசமாக இன்னொருவன் தப்பி விட்டான். பிடிபட்ட நபரிடமிருந்து 2 மூட்டைகளில் நகைகள் மீட்கப்பட்டன. இவை அனைத்தும் லலிதா ஜுவல்லரி நகைக் கடையிலிருந்து திருடப்பட்டவை என்பது பார் கோடு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லலிதா ஜுவல்லரி நகைக் கடையின் திருச்சி கிளையில், 30 கிலோ தங்கம் மற்றும் ஏராளமான வைர நகைகளை சாமர்த்தியமாக முகமூடி அணிந்து, மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இரவு நேரத்தில், நகைக் கடையின் பின்புற சுவரை துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள், 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அள்ளிச் சென்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.சிசிடிவி பதிவுகள்கொள்ளையர்கள் வட மாநிலத்தவரா, கடை ஊழியர்களுக்குத் தொடர்பு உண்டா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை முடுக்கி விடப்பட்டது.  கடையின் சிசிடிவி பதிவுகளும் கூட வெளியாகியிருந்தன.

இந்த நிலையில்,

திருவாரூரில் வாகன சோதனையின் போது பைக்கில் வந்த கொள்ளையனை போலீசார் மடக்கி பிடித்தனர். மற்றொருவன் தப்பி ஓடி விட்டான்..ஒருவன் சிக்கினான் இன்னொருவன் ஓட்டம்

2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன.

மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, ‘பார் கோடு’ மூலம் தெரியவந்துள்ளது. பிடிபட்டவனிடம் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் திருடப்பட்டது என்பது உறுதியானதாக தகவல் தெரியவந்ததுள்ளது.

சுரேஷ் என்ற கொள்ளையன் போலீஸ் வசமிருந்து தப்பி ஓட்டம்.

முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்

திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என தெரிய வந்துள்ளது

. தப்பியோடியவர் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இருவர் தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. பிடிபட்ட கொள்ளையன் திருச்சியை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல் கூறப்படுகிறது.

 

சிக்குவானா சுரேஷ்?

தப்பி ஓடி விட்ட சுரேஷைப் பிடிக்க போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சுரேஷின் தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி குணா உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைப் பிடித்து தற்போது தங்கள் வசம் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இன்றைக்குள் சுரேஷும் பிடிபடுவான் என போலீஸ் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.*

 

*திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையனை சாதுர்யமாக  பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு திருச்சி மண்டல ஐஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.*

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன