இந்து மதத்திற்காக உயிரைத் தருவேன்.-திருமாவை எதிர்க்கும் காயத்ரி ரகுராம்

நடிகை காயத்ரி ரகுராமை கண்டித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் …

இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம், நான்.அச்சப்பட மாட்டேன்    ..                               – – – காயத்ரி ரகுராம்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையும் ரகுராம் மாஸ்டரின் மகளும் , நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திருமாவளவன் என்று ஆரம்பித்து சர்ச்சையான சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

*நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை பற்றி அவதூறாக பதிவிட்டு, அதற்கு எதிர்ப்பு கிளம்பிய பின்பு அந்த பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது*

*இந்நிலையில் சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டை முற்றுகையிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்*

 

*அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனிடையே விடுதலை சிறுத்தைகள் போராட்டம் குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், திருமாவளவன் இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து பேசி வருவதாகவும், தற்போது அவரது ஆட்களை விட்டு தம்மை தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அச்சப்பட போவதில்லை என பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், தனது மதத்திற்காகவும், நாட்டிற்காகவும் உயிரை கூட கொடுக்க தயார் என தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில், வரும் 27ஆம் தேதி, மெரினா கடற்கரைக்கு தாம் தனியாக செல்ல உள்ளதாகவும், அங்கு இந்து மதத்தை பற்றி தவறாக பேசி வருபவர்களிடம் விவாதிக்க தயார் என்றும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

டெய்ல் பீஸ்:

– =============================

நடிகை காயத்ரி ரகுராமுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது*

ராஜகர்ஜனை ( சமூகம் )

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன