தமிழகத்தின் தமிழிசை .. தெலுங்கானாவின் ஆளுநர்

தெலுங்கானாவிற்கு தமிழகத்தில் இருந்து முதல் பெண் ஆளுநர் .

*தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது*

*தமிழகத்தில் பாஜக தலைவராக இருந்து வரும் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்*

*கேரள மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டுள்ளார்*

*இதேபோல் ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார் இமாசல பிரதேசம் ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது*

தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கூறுகையில்…

“தெலங்கானா வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பாடுபடுவேன்”

*தெலங்கானாவுக்கு ஆளுநர் ஆனாலும், தமிழகத்திற்கு என்றும் சகோதரி தான் –

*என் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு தெலங்கானா ஆளுநர் பொறுப்பை பிரதமர் மோடி அளித்திருக்கிறார் –

*பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நன்றி –

*என் மீது பாசத்தை பொழிந்த தமிழக மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி –

என கண்களின் ஆனந்தக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதையடுத்து தமிழக பாஜக தலைவராக இருந்து வரும் தமிழிசை தமிழக தலைமை பதவியை ராஜினாமா செய்கிறார். அடிப்படை பொறுப்பில் இருந்தும் விலகுகிறார்.

எனவே தமிழக பாஜகவிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பு ..
====================

தெலங்கானா ஆளுநரானார் தமிழிசை*

* இவரது தந்தை குமரிஅனந்தன், சித்தப்பா ஹெச்.வசந்தகுமார் எம்.பி இருவரும் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர்*

*மத்திய அமைச்சராக பொன்.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தமிழக பாஜக தலைவரானார், தமிழிசை*

*மருத்துவர், இலக்கியவாதி, சமூக ஆர்வலர், அரசியல்வாதி என பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர்*

*ஆகஸ்ட் முதல் தமிழக பாஜக தலைவராக பதவி வகித்து வருகிறார், தமிழிசை*

 

*தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் தமிழிசை…!*

கடந்து வந்த பாதை…
====================

*தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக(ஞாயிற்றுக்கிழமை) தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் நியமிக்கப்பட்டார்.

*1961- ஆம் ஆண்டு நாகர்கோவிலில், ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் தமிழிசை. முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை.சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப்படிப்பை முடித்த அவர், பின்னர் தனது மருத்துவ மேற்படிப்பை முடித்தார். இவரது கணவர் சௌந்தரராஜனும் ஒரு மருத்துவர்.தமிழிசையின் தந்தை குமரி அனந்தன், பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்ற போதிலும், யாரும் எதிர்பாராமல் தனது விருப்பத்திற்கேற்ப பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார் தமிழிசை.

எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி1980களில் நடந்த தமிழிசையின் திருமணத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி ஆகிய இருவருமே கலந்து கொண்டனர்.அரசியலில் வெவ்வேறு துருவங்களாக இருந்தபோதிலும், விமர்சனங்களை தாண்டி, \’எனது திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி\’ என்று நெகிழ்ச்சியாக பலமுறை தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் இவர் தனது மகனின் திருமணத்தில் கட்சி வேறுபாடுகளை கடந்து அனைத்துக் கட்சி தலைவர்களையும் நேரில் சென்று அழைத்தது அரசியல் வட்டாரத்தில் அப்போது பாராட்டுகளை பெற்றது.நரேந்திர மோதி முதல்முறையாக பிரதமராக பதவியேற்ற 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்பட்டார்.நாடு முழுவதும் பாஜக வென்ற போதிலும், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு பெரிய வாக்குவங்கி இல்லை என்று கருதப்பட்ட நிலையில், மாநில பாஜக தலைவராக இருந்த தமிழிசைக்கு பொறுப்புகளும், சவால்களும் அதிகமாகவே இருந்தன.

கடந்த 5 ஆண்டுகளில் நீட், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் என பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக பல போராட்டங்கள் மற்றும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தநிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கடுமையான சவால்களையும், கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகத்தினரிடம் எதிர்கொண்டார்.ஆனால் இவற்றை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் எதிர்கொண்ட தமிழிசை, ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தயக்கம் இல்லாமல் பதிலளிக்கக்கூடியவர் என்ற நிலையில் பாராட்டப்பட்டார்.

தமிழக தலைவர்களில் சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டவர் தமிழிசை. அவரது அரசியல் அணுகுமுறையை தாண்டி அவரது சிகையலங்காரம் போன்ற தனிப்பட்ட விஷயங்களைகூட பலர் கிண்டல் செய்தபோதும், அதனை இயல்பாக எடுத்துக்கொண்டு, அது தன் அரசியல் பணியை பாதிக்காதவாறு அவர் செயலாற்றிய விதம் பலரின் பாராட்டுகளையும் பெற்றுத்தந்தது.தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்\’ என்று தமிழிசை கூறியது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எள்ளிநகையாடப்பட்டது. ஆனால், எந்த கேலி, கிண்டலையும் பொருட்படுத்தாமல் தன் கட்சிக்காக இன்னும் அதிதீவிரமாக அவர் குரல் ஒலித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.பாஜக முன்னணி தலைவர்கள் பலருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆதரவு மற்றும் நெடிய பின்னணி இருக்கும். அவ்வாறு உள்ளவர்களால்தான் பாஜகவில் உயர் பதவியை அடையமுடியும் என்ற கருத்தும் பரவலாக உண்டு. அதற்கு விதிவிலக்காக இருந்தவர்

தமிழிசை.தேர்தல்களத்தில் தமிழிசைஇதுவரை இரண்டுமுறை சட்டப்பேரவை தேர்தல்களிலும், நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன் ஒருதடவையும் வென்றதில்லை.2009-ஆம் ஆண்டில் வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை செளந்தரராஜன், நான்காவது இடத்தையே பெற முடிந்தது. அந்தத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டி. கே. எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார்.அண்மையில் நடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டார்.மிகவும் பரபரப்பான தேர்தல் போட்டியாக இது கருதப்பட்ட நிலையில், தூத்துக்குடி தொகுதியில் தமிழிசை 3, 47, 209 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழியிடம் தோல்வியடைந்தார்.இதேபோல 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரத்திலும், 2011 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரியிலும் போட்டியிட்ட தமிழிசை முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடத்தை பிடித்து தோல்வியடைந்தார்.விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள்இவர் தலைவரான பிறகு நடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல் ஆகியவை நடந்தன.

இதுவரை 2014-இல் கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் மட்டுமே பாஜக சார்பாக வெற்றி பெற்றுள்ளார்.2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட பாஜக எந்த தொகுதியிலும் வெல்லவில்லை. அதேபோல் அண்மையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவுக்கு எந்த வெற்றியும் கிட்டவில்லை.இந்த தேர்தல் முடிவுகள் இவரது தலைமைக்கு எதிராக சில விமர்சனங்களை ஏற்படுத்தியது.இதேபோல் நீட், ஸ்டெர்லைட் போன்ற மிகவும் தீவிரமான விவகாரங்களில் பாஜகவின் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காமல் இவர் அளித்த பல பேட்டிகள் அவருக்கு எதிரான விமர்சனங்களை அதிகரித்தது.பாஜகவில் நீண்ட பின்னணி மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் ஆதரவு ஆகியவை எதுவும் இல்லாமல், தனது உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றால் 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை, தமிழக பாஜக தலைவர்களில் மிதவாத தலைவராக எதிர்க்கட்சிகளாலும் கருதப்பட்டவர்.தொடர்ந்து கட்சிக்காக அவர் உழைத்து வந்த போதிலும், தமிழக சூழலில் கடுமையான சவால்களை எதிர்கொண்டபோதிலும், கடுமையாக உழைத்தும் கூட, தேசிய அளவில் அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் நிலவிவந்தது. .அதற்கு பதில்கூறும் வகையில் தற்போது தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த பதவி சவால்களை எதிர்கொண்ட அவரின் பாங்கு, உழைப்பு, போராட்ட குணம் ஆகியவற்றுக்கு கிடைத்த பரிசு என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.ஆளுநர் நியமனம் அசாதாரணமான ஒன்றுதான் என்பது மறுப்பதற்கில்லை. எல்லோராலும் போற்றி பெருமைப்பட வேண்டிய விஷயம் இது.. தருணம் இது…

தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட தமிழிசை செளந்தரராஜனின் அரசியல் பயணம் மற்றும் வளர்ச்சி குறித்து பிபிசி தமிழிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கோபண்ணா, ஆரம்ப காலத்தில் அவரது தந்தை குமரி அனந்தன் பாதயாத்திரை மேற்கொண்டபோது, ஒரு மருத்துவராக தன் தந்தையை அவர் கவனித்து கொண்டார். அப்போதிலிருந்து அவரை நான் அறிவேன்என்று நினைவுகூர்ந்தார்.’அடிப்படையில் ஒரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து வந்த அவர் பாஜகவில் எதிர்பாராவிதமாக தன்னை இணைத்து கொண்டார். அதற்கான காரணம் எனக்கு தெரியாதசில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக சார்பாக, அவர் தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் சார்பாக அந்த விவாதங்களில் நான் பேசுவேன். தமிழகத்தில் பிரபலமாகாத பாஜகவை அவர் தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பிரபலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார்என்று கோபண்ணா கூறினார் மேலும் அவரது தந்தையின் தமிழ் ஆளுமை இவருக்கும் உண்டு. எதுகை, மோனை நடையில் உரையாடுவது, சிறந்த உச்சரிப்பு நடை போன்றவற்றால் அவரது பேச்சு பலரையும் கடுமையான விமர்சனங்கள், தனிநபர் தாக்குதல்கள் போன்றவற்றை கண்டு அவர் அஞ்சியதில்லை. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸில் பெரிய பின்னணி இல்லாத நிலையில் அவரின் வளர்ச்சி மற்றும் அண்மைய ஆளுநர் நியமனம் அசாதாரணமான ஒன்றுதான் என்று கோபண்ணா மேலும் குறிப்பிட்டார்.*

அது மட்டுமல்லாமல் தமிழக முதல்வர், எதிர்கட்சி தலைவர், அவரை எதிர்த்து வென்ற போட்டியாளர் உட்பட மற்றும் அத்துணை பேரும் பாரபட்சமின்றி தத்தமது வாழ்த்துக்களை வழங்கிய வண்ணம் உள்ளார்கள்…

நாமும் நமது ” ராஜ கர்ஜனை ” சார்பில் உளமாற பெருமையுடன் வாழ்த்துகிறோம்.

 

டெய்ல்…

நம் தமிழகத்திற்கு இதனால் எதாவது நல்லது நடந்தால் சரி.

ராஜ கர்ஜனை (அரசியல் )

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன